சென்னை : விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்று கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஈசாத்தி மங்கலம் பகுதியில் இருந்து பூதப்பாண்டி வரை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இந்த ஆர்எஸ்எஸ் பேரணியை கன்னியகுமாரி தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி […]
சென்னை : வரும் அக்டோபர் 12 விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம். இந்த ஆர்எஸ்எஸ் பேரணி தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக , தமிழ்நாட்டில் 58 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டு தமிழக காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் 42 இடங்களில் அனுமதி அளித்து, 16 இடங்களில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு அனுமதி […]
டெல்லி : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பாஜக, பிரதமர் மோடி , ஆர்எஸ்எஸ் பற்றி தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், “இந்தியா என்பது ஒற்றை கருத்த்தை கொண்டு செயல்படுகிறது என ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது. இந்தியா பல்வேறு கருத்துக்களை கொண்டு செயல்படுகிறது நாங்கள் நம்புகிறோம். ஜாதி, மொழி, மதம், இனம் என வேறுபாடின்றி […]
மத்திய பிரதேசம் : ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்) எனும் இந்துத்துவா அமைப்பில் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினராக இணைந்து பணியாற்ற கூடாது என 1966ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடையை அண்மையில் மத்திய அரசு நீக்கியது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த ஆர்எஸ்எஸ் தடை விவகாரம் குறித்து முன்னதாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் கடந்த 2023இல் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் புருஷோத்தம் குப்தா என்பவர்,1966 ஆம் […]
டெல்லி : கடந்த 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை நீக்கி அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள் RSS-ல் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மோடி அரசு விலக்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் மத்திய ஊழியர்கள் பங்கேற்க 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. பொதுவாகவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்க கூடாது […]
சு.வெங்கடேசன்: பொதுவாகவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. மத்திய சிவில் சேவைகள் (நடத்தை) விதி 1964இன் படி இது அமலில் இருக்கிறது. இந்த விதியின் கீழ் RSS எனும் இந்துவதுவா இயக்கத்திலும் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. ஆனால் அது தற்போது தளர்த்தப்பட்டு இருப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதள […]
சென்னை: சாவர்க்கரின் 5 பெருமைகள் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அண்மையில், மும்பை சென்று அங்கு அண்ணல் அம்பேத்கார் நினைவிடம், சாவர்க்கர் நினைவிடம் ஆகிய இடங்களுக்கு சென்று வணங்கினர். அதில், சாவர்க்கர் நினைவிடத்திற்கு சென்றுவிட்டு அவர் பேசுகையில், சாவர்க்கர் துணிச்சலுக்கும், நாட்டின் மீது அசையாத அர்ப்பணிப்புக்கும் அடையாளமாக இருந்தார் என்றும், அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், அறிஞர் மற்றும் சிந்தனையாளராகவும் இருந்தார் என்றும், […]
பாரத ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தற்போது பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை (Bharat Jodo Nyay Yatra) மணிப்பூரில் இருந்து கிழக்கு முதல் மேற்காக தொடங்கியுள்ளார் . இந்த ஒற்றுமை நியாய யாத்திரை கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கபட்டது. அசாம் மாநிலத்தில் கோலகஞ்சி, துப்ரி ஆகிய மாவட்டங்களை கடந்து தற்போது மேற்கு வங்கத்தில் யாத்திரை தொடங்கியுள்ளது. இன்னும் 25 வழக்குகள் கூட போடுங்கள்… நான் பயப்பட மாட்டேன்.! – ராகுல்காந்தி. இன்று […]
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக இந்து காங்கிரஸ் மாநாடு நடைபெறும். 2023ஆம் ஆண்டுக்கான உலக இந்து காங்கிரஸ் மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. இன்று (நவம்பர் 24) தொடங்கிய மாநாடு நாளை மறுநாள் (நவம்பர் 26) முடிவுபெறும். தாய்லாந்தில் நடைபெற்ற இந்து காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்து அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் எனும் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்து சமயம் பற்றியும் , கலாச்சாரம் பற்றியும், இன்றைய உலகம் என்றும் பல்வேறு கருத்துக்களை […]
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 19 அல்லது நவம்பர் 26 என இரு தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் அனுமதி வழங்கப்டும் என்றும், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த கேட்டுள்ள தேதிகளில் வேறு சில மத விழாக்கள் நடைபெற இருந்ததால் அனுமதி […]
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்துக்கு காவல் துறை அனுமதிக்கவில்லை என்பதால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த அவமதிப்பு […]
அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக, ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பினர், நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் […]
விஜயதசமியை முன்னிட்டு நாக்பூரில் உள்ள ரெஷிம்பாக் மைதானத்தில் ராஸ்திரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அமைப்பினர் நடத்திய தசரா நிகழ்வில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் உலக நாடுகள் இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு, அமைதிக்கான […]
சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வாச்சாத்தி விவகாரத்தில் மக்களுக்கு நியாயம் கேட்டு 30 ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட போராட்டம் நடத்தி வந்த நிலையில் வரலாற்று தீர்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இந்த வழக்கில் மக்களுக்கு தீர்ப்பு கிடைத்தாலும், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை நடத்திவரும் பாதயாத்திரை மக்களுக்காக நடத்தப்படவில்லை. மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக […]
இந்துத்துவா அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் எனும் RSS அமைப்பு தென் தமிழகத்தில் 20 இடங்களில் அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பேரணி நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர். தேவர் குருபூஜை , தூத்துக்குடி குலசை தசரா உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி காவல்துறையினர் அனுமதி வழங்காமல் இருந்தனர். இதனை அடுத்து RSS அமைப்பு சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி இளங்கோவன், […]
கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்துத்துவா அமைப்பான RSS அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்துவதற்கு தமிழக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். பின்னர் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து, RSS அமைப்பினர், சென்னை உயர்நீதிமன்றம் கடந்து உச்சநீதிமன்றம் வரையில் வழக்கு நடத்தி, இறுதியில் தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பின்படி, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் RSS பேரணி நடத்தப்பட்டது. தற்போது அதே போல தென் […]
அண்மையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்த 5 மாநில தேர்தல்களில், மிசோராம் சட்டமன்ற தேர்தலும் ஒன்று. மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வெவ்வேறு தேதிகளில் நடைபெறும் தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளன. அதிலும் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மாநிலந்தோறும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் சேர்த்து மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பிரதேசம் […]
இந்துத்துவா அமைப்பான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் எனும் RSS அமைப்பினர் , அதன் தோற்றுவிக்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய 2 ஞாயிற்று கிழமைகளில் தென் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரினர். குறிப்பிட்ட 14 மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்துவதற்கு அந்தந்த ,மாவட்ட காவல் உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் , அனுமதி தர தாமதமானதால், ஆர்எஸ்எஸ் அமைப்பு மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடியது. […]
ஆர்எஸ்எஸ் தோற்றுவிக்கப்பட்ட நாளான ‘விஜயதசமி (அக்டோபர் 24)’ நாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 22 மற்றும் 29 என இரு தினங்கள் (ஞாயிற்று கிழமைகள்) தென் தமிழகத்தில் இந்துத்துவா அமைப்பான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் எனும் RSS அமைப்பினர் பேரணி நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர். அக்டோபர் 22ஆம் தேதி 8 மாவட்டங்களிலும், அடுத்து அக்டோபர் 29ஆம் தேதி 12 மாவட்டங்களிலும் என மொத்தமாக 14 தென் மாவட்ட தலைநகரங்களில் மட்டும் பேரணி நடத்த அந்தந்த மாவட்ட […]
குஜராத் மாநிலம், வதோதராவில் இந்துத்துவா அமைப்பானா ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய RSS பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே, ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் ஜாதி பாகுபாட்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினார். மேலும் அவர் கூறுகையில், ‘ அனைத்து இந்து கோவிலிலும் அனைவருக்கும் நுழைய உரிமை உண்டு. அனைத்து நீர் ஆதாரத்திலிருந்தும் தண்ணீர் எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சாதி பாகுபாட்டின் பெயரால் இத்தகைய பாகுபாடுகளை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது, […]