பஞ்சாபில் ஜனவரி 21ஆம் தேதி வரை பள்ளிகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இன்று மாநிலத்தின் பல பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியால் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த […]
தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் உத்தரவு. தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் சட்டத்தில் ஏற்கனவே தடை உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நவம்பர் 26 மற்றும் 27-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முகாம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது […]
மாணவி மரண விவகாரத்தில் கைதான கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற வந்த மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்தது தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மாணவி உயிரிழந்தது தொடர்பாக […]
கலவரத்துக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. மாணவி மர்ம முறையில் உயிரிழந்ததுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. மாணவி மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, […]
மறு பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என தந்தை மீண்டும் முறையீடு. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. மாணவியின் உடலை 3 மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உடல் மறுகூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தந்தை மற்றும் தனது வழக்கறிகருடன் […]
தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்ட நிலையில், நாளை முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என அறிவிப்பு. தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இதனை எதிர்த்து, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டன. இருப்பினும், பள்ளிகளை அரசு அனுமதி இன்றி மூடக்கூடாது என்ற உத்தரவால், பெரும்பாலான பள்ளிகள் இன்று […]
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை கும்பகோணம் தாராசுரம் KSK கல்லூரியில் தொடங்கி வைத்து, வேலை கிடைக்கப்பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை […]
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அனுப்புவது அடிப்படை கல்வி உரிமையை மறுப்பதாகும் என்றும்,இது தொடர்பாக புகார் வரும் பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்திருப்பதாக பகரி மூலம் பகிரப்பட்டுள்ளது என்றும், […]
தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்ததை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டண […]
பெற்றோர்களை கட்டாயப்படுத்தி தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். பிளஸ் டூ பொதுத் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ்டூ பொதுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசின் கருத்துக்கள் முதல்வரின் கவனத்துக்கு […]
தனியார் பள்ளிகள் 40 % கல்விக் கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் , கல்விக் கட்டணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவெடுக்கும் என தமிழக அரசு பதில் தெரிவித்தது. இதனையடுத்து, தமிழக அரசு, தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது […]