மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை – புதுக்கோட்டை நகர பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்!

Pudukottai district city buses are being affixed with stickers to enforce the announcement of Tamil Nadu Chief Minister MK Stalin that women can travel on city buses free of charge.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முதல் உத்தரவாக நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அறிவிப்பை அமலுக்கு கொண்டு வரும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட நகர பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.  இந்நிலையில் முதல்வராக பதவி ஏற்ற பின்பு அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் எனும் முதல் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இந்த அறிவிப்பு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உடனடியாக அமலுக்கு வருகிறது.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர பேருந்துகளிலும் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை எனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஸ்டிக்கர் ஒட்டும் பணியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்கள் பார்வையிட்டு, இது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.