புத்தாண்டு – நட்சத்திர ஓட்டல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

Default Image

நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பு.

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80% பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த கூடாது எனவும் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது. ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். காவல்துறை தரப்பில் தரப்படும் OR CODE-ஐ மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் கார்களில் ஒட்ட வேண்டும்.

சென்னையில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை ஆலோசனை நடத்திய பிறகு இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆலோசனை கூட்டத்திற்கு பின் காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து ஹோட்டல் நிர்வாகிகள் விளக்கமளித்தனர். அதிக போதையில் இருக்கும் நபர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்