இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது சென்னை காவல்துறை. சென்னை கடற்கரை சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை 6 […]
நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பு. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80% பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த கூடாது எனவும் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது. ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். காவல்துறை […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா: கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் விகாஷ் குமார் மற்றும் மங்களூரு நகரத்தின் கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்த தடை உத்தரவுகள் இன்று மாலை 6 மணி முதல் 2021 ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை […]
மத நம்பிக்கை விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று ஆளுநர் கிரண்பேடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அம்மாநில முதல்வர் நாராயணசாமி அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கியதை பரிசீலிக்க வேண்டும் என்று கூறி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்று எழுந்தியிருந்தார். […]
புத்தாண்டு தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். முதன் முதலாக நியூ சிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. ஆண்டுதோறும் புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படம் பண்டிகை ஆகும்.2019-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை 2020 -ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் உலகம் முழுவதும் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. உலக நாடுகளில் முதன் முதலாக நியூ சிலாந்தில் தான் புத்தாண்டு பிறக்கும் .அதேபோல் இந்த ஆண்டும் நியூ சிலாந்தில் புத்தாண்டு முதன் முதலாக […]
சீன நாட்டின் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, அங்கு அந்நாட்டு மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.சீனா நாட்டின் பல்வேறு வீதிகளிலும் , அங்குள்ள முக்கிய நகரங்களிலும் மின்னொளியில் அழகுகளால் ஜொலிக்கின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்தை விட்டு அங்கு சுமார் 20 லட்சம் எல்.இ.டி விளக்குகளினால் கட்டடங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கே பல வண்ணங்களில் இருக்கும் ராந்தர் விளக்குகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. புத்தாண்டை குதூகலமாக கொண்டாடிவரும் சீன மக்கள், தெருக்களில் ஜொலிக்கும் கட்டடங்கள் முன் நின்று பிரமிப்பாக பார்த்து ரசித்து செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். […]