கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் (ராஜ்பவன்) முதல் கேட் முன்பு உள்ள பாரிகாட் (இரும்பு தடுப்பு) மீது கருக்கா வினோத் பெட்ரோல் பாட்டில் குண்டு வீசினார். வீசிய உடன் அருகில் இருந்த சென்னை மாநகர காவல்துறையினர் அவரை உடனடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், பெட்ரோல் குண்டு வீசுவதற்கு சில […]
தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. அதில், சுற்றுச்சுழலுக்கு உகந்த பசுமை பட்டாசுக்கள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது என பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது என […]
இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் மெயின் கேட் முன்பு தேனாம்பேட்டை பகுதியியை சேர்ந்த கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக காவல்துறையினர் வினோத்தை கைது செய்து உள்ளனர். இவர் இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி அதன் பெயரில் சிறை தண்டனை பெற்று சென்ற வாரம் தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]
இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது சென்னை காவல்துறை. சென்னை கடற்கரை சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை 6 […]
நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பு. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80% பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த கூடாது எனவும் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது. ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். காவல்துறை […]
சிசிடிவி-யில் உள்ள முகத்தை கண்டுபிடிப்போருக்கு 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என சென்னை காவல்துறை அறிவிப்பு. குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பயன்படும் சிசிடிவி காட்சிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, ஒரு பரிசு போட்டியை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் விவரங்கள், முகங்களை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் முகங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருப்பதால் காவல்துறை இதுபோன்ற அறிவிப்பை அறிவித்துள்ளது. இரு கட்டங்களாக […]
தமிழ்நாடு முழுவதும் போலியான வங்கி நடத்தி வந்த கும்பல் கைது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல். சென்னை உள்பட 9 மாவட்டங்களில் செயல்பட்ட போலி வங்கி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் 9 இடங்களில் போலி வங்கி நடத்தி மோசடி செய்துள்ளனர். நிஜ வங்கி போலவே டெபாசிட் செல்லான், சீல் என செட்டப் உடன் இயங்கியுள்ளது. […]
சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக சொல்லப்படுகிறதா? என ஜெயக்குமார் ட்வீட். லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க லுங்கி அணிந்து வந்தவரை காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை என தகவல். லுங்கி தடை செய்யப்பட்ட ஆடையா? என்றும் சாமானிய மக்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரக்கூடாது என மறைமுகமாக […]
சென்னையில் போக்குவரத்தை சீர்செய்திட காவல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையில் காவல்துறைக்கு, புதிய ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை காவல்துறைக்கு கூடுதல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் ரூ.14.71 கோடி மதிப்பிலான 93 ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். சென்னையில் போக்குவரத்தை சீர்செய்திட காவல் ரோந்து வாகனங்கள் […]
கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு. இளையராஜா விவகாரத்தில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உத்தரவு கடிதம் கிடைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை தர உத்தரவிட்டது. இந்த நிலையில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]
மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை. தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் சந்தித்து சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூல் தொடர்பாக மக்கள் கொடுத்த புகாரின்பேரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு […]
ஒரு ஐஜி, 12 எஸ்பிக்கள் என மொத்தம் 13 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வந்த துணை ஆணையர் விமலா உள்பட 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு ஐஜி, 12 எஸ்பிக்கள் என மொத்தம் 13 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, […]
இன்று நடைபெறும் வேளாங்கண்ணி தேர்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் திருவிழா ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 9-ஆம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில், கொரோனா காலம் என்பதால் சில முக்கியமான வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு சென்னை காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகர் திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் வருடாந்திர திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொள்வதுண்டு. ஆனால் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் , அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழந்த விவகாரத்தோடு தொடர்புப்படுத்தி வேறு வீடியோக்களை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை […]