வேடிக்கைதான் பார்க்க முடியும், களத்தில் இறங்கி நிற்கமுடியாது – புகழேந்தி

National parties can only have fun in Tamil Nadu. AIADMK spokesman Pugazhendi said he could not stand on the field.

தேசிய கட்சிகள் தமிழகத்தில் வேடிக்கைதான் பார்க்க முடியும். களத்தில் இறங்கி நிற்கமுடியாது என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி கருத்தை மாநில பாஜக தலைவர்கள் உணர்ந்து பின்பற்ற வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். பாஜக தலைமையின் கருத்தை சி.டி.ரவி எதிரொலித்து இருக்கிறார். தேசிய கட்சிகள் தமிழகத்தில் வேடிக்கைதான் பார்க்க முடியும். களத்தில் இறங்கி நிற்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்றும் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எங்களை ஆதரிக்கின்றன எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.