நாளுக்கு நாள் பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி. பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி இன்று திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி செல்கிறது. பாஜகவில் உள்ள ஒவ்வொருவரின் கடமையும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வளர்ச்சி தான். திமுக, காங்கிரஸின் நோக்கம் அவர்களது குடும்பத்தை வளர்ப்பது தான் என கூறினார். 5ஜி ஸ்பெக்ட்ரம் […]
தமிழகம் முன்னேற வேண்டுமென்றால், நரேந்திர மோடி, பழனிசாமி என்ற டபுள் எஞ்சின் தேவை. பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கோயம்புத்தூர் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காக தினமும் பொய்களை கூறி வருகிறார் என்றும், இந்துக்களை மட்டும் இழிவுபடுத்த ஸ்டாலின், ஆத்திகரா? அல்லது நாத்திகரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கடவுள் இல்லை என்று சொல்லும் ஸ்டாலின், அனைத்து இடங்களிலும் வேலொடு சென்று, வேல் […]
திமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத், சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். விழுப்புரம் மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ஜி.சம்பத் திமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், 21 ஆண்டுகளாக கட்சியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. என் தந்தைக்கு மணிமண்டபம் கட்டுவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் இதுகுறித்துச் சொல்லப்படவில்லை என குற்றசாட்டினார். மேலும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதை குறித்து விமர்சித்து வருகின்றனர். இதனால் என் சுயமரியாதையைக் […]
எங்களின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கிடையாது என சிடி ரவி தெரிவித்த கருத்துக்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்தனர். அதிமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வலியுறுத்துவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிட […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியிடப்படும் என சிடி ரவி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதறகான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், கடந்த 10ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து 20 தொகுதிகளிள் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக மாநில தலைவர் எல் முருகன் டெல்லி சென்றுள்ளார். ஆகையால், தேர்தலில் போட்டியிடும் […]
தாமரையும் எங்களது தான், இரட்டை இலையும் எங்களது தான் என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தேசிய கட்சியான தாமரையும் எங்களது தான், கூட்டணியில் இருக்கும் இரட்டை இலையும் எங்களது தான், மாம்பழமும் எங்களது தான் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் தேசிய கட்சி கூட்டணியில் இருக்கும் அனைத்து சின்னமும் எங்களது தான் என குறிப்பிட்டுள்ளார். பாஜக தேசிய கட்சி என்பதால் ஆங்கிலம் மற்றும் இந்திக்கு தான் […]
தமிழகத்தின் நண்பன் மோடி, தமிழக கலாச்சாரத்தை நாங்கள் தான் பாதுகாத்து வருகிறோம் என்று சி.டி.ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாட்டு நிகழ்ச்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி ஒரு எளிய மனிதர். மொத்தத்தில் அவர் ராசியான முதல்வர் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் நண்பன் மோடி, தமிழக […]
வாக்காளர்களை கவருவதற்காக ராகுல் காந்தி கோமாளி போல செயல்படுகிறார் என சி.டி.ரவி விமர்சித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகையில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு வரவேற்பு உள்ளது. அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறும் என்று […]
ஜெயலலிதாவின் கனவை தினகரனும் நிறைவேற்றுவார் என சிடி ரவி கூறியது அமமுகவுக்கு பாஜக சூசகமாக அழைப்பு விடுப்பதாக கேள்வி எழுந்துள்ளது. சென்னை தியாகராய நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை அதிமுக – பாஜக கூட்டணி நிறைவேற்றும். அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இதற்காக தான் தொடர்ந்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து […]
பிரதமர் மோடி பிப்.25-ஆம் தேதி கோவை வரவுள்ளதாக பாஜகவின் சிடி ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு வரும் 25-ஆம் தேதி மீண்டும் வரும் பிரதமர் மோடி அரசு பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். பிப் 19-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருவதாகவும் சிடி ரவி தெரிவித்துள்ளார். மேலும், மத்திய பாதுகாப்பாத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரும் 21-ஆம் தேதி சேலம் வருகிறார் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இன்று சென்னை வந்துள்ள பிரதமர் […]
தேசிய கட்சிகள் தமிழகத்தில் வேடிக்கைதான் பார்க்க முடியும். களத்தில் இறங்கி நிற்கமுடியாது என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார். தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி கருத்தை மாநில பாஜக தலைவர்கள் உணர்ந்து பின்பற்ற வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். பாஜக தலைமையின் கருத்தை சி.டி.ரவி எதிரொலித்து இருக்கிறார். தேசிய கட்சிகள் தமிழகத்தில் வேடிக்கைதான் பார்க்க முடியும். களத்தில் இறங்கி நிற்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக […]
முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எங்களை ஆதரிக்கின்றன. கே.பி.முனுசாமி கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனிடையே, கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை மத்திய தலைமை தான் அறிவிக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் […]
தேர்தலுக்கு பிறகே, அதாவது தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்பு தான், முதல்வர் வேட்பாளர் பற்றி முடிவு எடுக்கப்படும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது. இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் அதிமுக கூட்டணியுடன் இருந்து வருகிறோம். அந்த கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள், முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக […]
பசு படுகொலை விரைவில் தடை செய்யப்படும் கர்நாடகாவில் நிறைவேறும் என்று பாஜக தலைவர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா, கோவா மற்றும் தமிழ்நாட்டில் கட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பான முன்னாள் கர்நாடக அமைச்சர் ட்விட்டரில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் மாட்டு வதைக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என்றார். இதனை தொடர்ந்து, இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் சி.டி.ரவி, “எதிர்காலத்தில் கர்நாடகாவில் பசு படுகொலை தடை ஒரு யதார்த்தமாக இருக்கும்.” இது குறித்து, கால்நடை […]