"தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேரடி அவமானம்" – வங்கதேச மொழி என கூறியுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

வங்க மொழியை வங்கதேச மொழி என டெல்லி காவல்துறை குறிப்பிட்டதற்கு, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

mk stalin

டெல்லி :வங்கமொழியை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை வங்கதேச மொழி என்று கூறியுள்ளது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேர்ந்த அவமானம் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கு நேரடி அவமானம் என்று கூறி, இது தற்செயலான பிழை அல்ல, மாறாக பன்முகத்தன்மையை சிறுமைப்படுத்தும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை வெளிப்படுத்துவதாக அவர் தனது எக்ஸ் பதிவில் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், ”வங்காள மொழியை ‘வங்கதேசத்தின் மொழி’ என டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளது, நம் தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேரடியான அவமானம். இது தற்செயல் பிழையோ, தவறோ அல்ல, பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பீடு செய்யும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையைக் காட்டுகிறது.

ஹிந்தி அல்லாத மொழிகள் மீதான இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்டு மேற்குவங்க மக்களுக்கும், அம்மொழிக்கும் மம்தா பானர்ஜி கேடயமாக நிற்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node