டெல்லி : ஆன்லைன் போலி பங்கு சந்தை மூலம் ரூ.100 கோடி வரையில் மோசடியில் ஈடுபட்டதாக சீனாவை சேர்ந்த ஃபாங் செஞ்சின் என்பவரை டெல்லி சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் மீது ரூ.100 கோடி வரையில் மோசடி வழக்கு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் அச்சுதன் என்பவர் சைபர் கிரைம் போலீசாரில் அளித்த புகாரில், தன்னிடம் ஆன்லைன் வாயிலாக பங்கு சந்தை முதலீடு குறித்து பயிற்றுவிப்பதாக கூறி வாட்ஸ்அப் செயலி வழியாக தொடர்பு […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பள்ளியில் நேற்று பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. நல்வாய்ப்பாக இந்த வெடி விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து டெல்லி சிறப்புபிரிவு போலீசார், தேசிய புலனாய்வு குழுவினர், தேசிய பாதுகாப்பு படையினர் என பல்வேறு விசாரணை குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவம் எப்படி நிகழ்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து […]
டெல்லி : ரோகிணி நகர் பிரகாஷ் விஹாரில் இயங்கி வரும் CRPF பள்ளி முன்பு இன்று காலை 9.30 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளிலேயே அங்கு புகை மண்டலம் சூழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை அடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வெடித்தது வெடிகுண்டா? அல்லது மர்மப்பொருளா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, தேசிய புலனாய்வுத் துறையினர் டெல்லி காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் […]
டெல்லி: உடல் உறுப்பு விற்பனையில் ஈடுபட்டதாக மருத்துவர் உட்பட 7 பேர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகளை, அவர்களின் உறவினர்கள் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தேவைப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிப்பது சமீப காலமாக மருத்துவ உலகில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உடல் உறுப்புகளை விற்பனை நோக்கத்தில் தானம் செய்வது சட்டப்படி பெரும் குற்றமாகும். இதனை தலைநகர் டெல்லியில் ஒரு கும்பல் தொடர்ந்து செய்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. உடல் உறுப்பு மாற்று […]
சென்னை: டெல்லி உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கடிதம் மின்னஞ்சல் வாயிலாக கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் உள்துறை அமைச்சக வளாகத்தில் தீவிர சோதனையை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும், மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் வந்திருந்தார். அப்போது, அங்கிருந்த கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் , ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது டெல்லி காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக […]
சென்னை : 110 நாட்களில் சுமார் 200 விமானங்களில் பயணம் செய்து பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்ட வந்த நபரை டெல்லி போலீஸ் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு உள்ளூர் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தன்னிடம் இருந்த 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை தொலைத்து இருந்தார். அதே போல கடந்த பிப்ரவரி மாதம் அமிர்தரஸில் இருந்து டெல்லிக்கு பயணித்த பயணி ஒருவர் 20 லட்சம் மதிப்புள்ள நகைகளை இழந்தார். […]
சென்னை : ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து டெல்லி காவல்துறை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லி காவல்துறைக்கு தொலைபேசி அழைப்பு மூலம் ஓர் புகார் வந்துள்ளது. அதாவது, முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவியும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினருமான ஸ்வாதி மலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற போது கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் என்பவாரல் தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக, […]
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு (டெல்லியில் 60, நொய்டாவில் 1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டல் இமெயில்களை தொடர்ந்து, டெல்லி போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளி மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு தேடுதல் குழுவினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அனைத்து பள்ளிகளிலும் தீவிர […]
Amit Shah Fake video : அமித்ஷா பற்றிய போலி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வழக்கமாக வழங்கப்பட்டு வரும் SC/ST , ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை போல தெலுங்கானா மாநிலத்தில், இஸ்லாமியர்களுக்கும் இடஓதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை பிற்படுத்தப்பட்டோராக கருதி 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தெலுங்கானா பிரச்சார கூட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் […]
SSC: டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் மொத்தம் 4,187 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதனால், தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். காலிபணியிட விவரங்கள்: மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தலைநகர் டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மத்திய ஆயுதப் படைகளில் பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், […]
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியை ஆந்திராவில் டெல்லி போலீஸார் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர். கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில், நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணுடைய முகத்தில் வைத்து மார்பீங் செய்யப்பட்டு மாற்றப்பட்டது. ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து கத்ரினா கைஃப் கஜோல் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இப்படி, நடிகைகளுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் […]
கடந்த புதன்கிழமை (டிசம்பர் 13) அன்று நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இரண்டு பேர் மக்களவையில் குதித்து வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தி கோஷமிட்டனர். அதே போல நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கோஷமிட்டனர். இதனை அவர்களது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார். அவர் தப்பிக்க இன்னொரு நண்பர் உதவி செய்தார் என மொத்தம் 6 பேர் இந்த வழக்கில் இதுவரை கைதாகியுள்ளனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 22ஆம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதல் நினைவுதினம் […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்வையிட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா ஆகியோர் உள்ளே வந்து திடீரென மக்களவைக்குள் குதித்து வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதே நேரத்தில் வெளியில் ஹரியானாவை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் அதே […]
நாடாளுமன்றத்தில் பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி உள்ளே மக்களவையில் நுழைந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வார திங்கள் கிழமை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பயங்கரவாத அமைப்பு இந்திய பாராளுமன்றத்தில் ஒரு வாகனத்தில் வந்து கடும் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், அந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த்னர். 23 பேர் உயிரிழப்பு.! பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.! […]
டெல்லியில் போலீஸ் உடையில் டூயட் பாட்டிற்கு இரண்டு காவல் துறையினர் நடனமாடியிருப்பது குறித்து விளக்கம் கேட்டு உயர் அதிகாரி உஷா ரங்கானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். டெல்லி மாடல் டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக சஷி என்பவரும், அதே காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக விவேக் மாத்தூர் என்பவரும் பணிபுரிகின்றனர். சஷி மற்றும் விவேக் இருவரும் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருவரும் காவல் நிலையத்தில் பணிபுரியும் நேரத்தில் காவல் உடையோடு ஆடல் பாடல் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லி காவல்துறையினரிடம்,காங்கிரஸ் கட்சியின் மாணவரணியினர் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாணவரணி அமைப்பான,இந்திய தேசிய மாணவர் சங்கத்தின்(என்.எஸ்.யு.ஐ) பொதுச் செயலாளர் நாகேஷ் காரியப்பா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என்று டெல்லி பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து,நாகேஷ் காரியப்பா அளித்த புகாரில்,”நாடு முழுவதும் அதிக அளவிலான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர்.இந்நிலையில்,நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை.எனவே,அவரை […]
டெல்லியில் தாய்,தந்தை இருவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் 6 மாத குழந்தையை டெல்லி காவல்துறை மீட்டு பராமரித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.அதைப்போன்று,டெல்லியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,டெல்லியின் மீரட்டில் உள்ள ஜி.டி.பி. நகரில் வசிக்கும் கணவன்,மனைவி ஆகிய இருவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு […]
ஒலிம்பிக்கில் இருமுறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் தான் சுஷில்குமார். மே மாதம் ஆறாம் தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இளம் மல்யுத்த வீரர்களான குமார், அஜய், பிரின்ஸ், அமிர், சாகர் உள்ளிட்ட 5 வீரர்களுடன் மூத்த வீரரான சுசில்குமார் உள்ளிட்ட […]
டெல்லி காவல்துறை காலநிலை மாற்ற ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க்கிற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து, குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது […]