“அதிமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம்!” – அமைச்சர் செல்லூர் ராஜூ
அதிமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அங்கு கலந்துகொண்டு பேசிய அவர், அதிமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம் எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். திமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம் எனக் கூறிய அவர், கட்சியை வலுவுடன் நடத்த முதல்வர், துணை முதல்வர் தாயாராக உள்ளதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி, மதுரை மக்கள் அமைதியாக வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.