மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதிலும் மெகா ஊழல்- ஸ்டாலின் !

15.66 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ‘எல்காட்’ டெண்டரில் பங்கேற்ற சீன நிறுவனம் ஒன்றுடன் நடைபெற்றுள்ள ஊழல் திருவிளையாடல்கள் பேரதிர்ச்சியளிக்கிறது. சீன நிறுவனம் இரு மாதிரிகளை (model) அளித்து அதன் சோதனை அறிக்கையும்(TestReport) கொடுத்திருந்தது.
ஒரு மாடல் செயல்திறனுக்கு 465 மதிப்பெண்கள்; இன்னொரு மாடல் 265 மதிப்பெண்கள். ஒன்று தரம் குறைந்தது என்றாலும் இரண்டும் ஒரே விலை. அதிமுக அரசு குறைந்த செயல்திறன் கொண்ட மடிக்கணினிக்கு ஆர்டர் கொடுத்து ஒரு மடிக்கணினிக்கு ரூ.3000 விதம் அடைந்த சட்டவிரோத லாபம் மட்டும் 469 கோடி ரூபாய்.
மெமரி 4 ஜி.பி.யிலிருந்து 8 ஜி.பி.யாக அதிகரிக்கும் வசதி இருக்க வேண்டும் என்று டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வசதி இல்லை மேற்கண்ட வசதியை பெற ரூபாய் 2500 மதிப்புள்ள புதிய ‘மதர் போர்டை’ பயன்படுத்த வேண்டுமாம்.
அதிலும் நிறுவனத்திற்கு ரூ.392 கோடி லாபம். 1921 கோடி ரூபாய் திட்டத்தில் நிகழ்த்தியுள்ள மகாபாதக மெகா ஊழல் இது; மொத்த நிதி ஒதுக்கீட்டில் ரூ .1,475 கோடி ரூபாய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. மாபெரும் ஊழலுக்கு வித்திட்டுள்ள முதலமைச்சர் பழனிச்சாமி மீதமுள்ள 456 கோடி ரூபாயை நிறுத்திவைத்து, எந்தவித தயக்கமுமின்றி அந்நிறுவனத்தை ‘பிளாக் லிஸ்ட்’ செய்து தரக் குறைவான கணினியை வழங்கியதற்காக பெருந்தொகையினை அபராதமாக அந்த நிறுவனத்திலிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025
12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
March 3, 2025
2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!
March 3, 2025