அமைச்சர்கள், ஸ்டாலின் பரப்புரை செய்ய தடை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு பதவி வகிக்கும் அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு சம்பளம் பெறுவதால் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனவும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லாததால் […]
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அரசியல் கட்சியினர் ஒருபுறம் வேட்புமனு தாக்கல் மறுபுறம் வேட்பாளர்கள் அறிவிப்பினை அறிவித்து வருகின்றனர். பல கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இன்று நாள் முகூர்த்த நாளாக உள்ளதால் பல முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் […]
இந்திய நாட்டின் வேளாண்மையை காக்க வந்த தவப்புருஷர் போல பேசிவிட்டுப் போய்விட்டார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று கோவையில் பேசியபோது பிரதமர் மோடி திமுக ஆட்சியில் அராஜகம் கட்டு அவிழ்த்து விடபட்டு இருப்பதாக தெரிவித்தார். இதற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து விழுப்புரத்தில் உள்ள தீவானுரில் மு.க ஸ்டாலின் பேசிய போது திமுகவை குற்றம் சாட்ட பிரதமர் மோடிக்கு உரிமை கிடையாது. தான் பிரதமர் என்பதை மறந்து, தரமற்ற முறையில் திமுக […]
திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததால் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி ஜனநாயகத்தை […]
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக சார்பில் “வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற தலைப்பிலும், திமுக சார்பில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற பெயரில் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜனவரி 29-ஆம் முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் தேர்தல் பிரசாரம் துவங்க உள்ளதாக அறிவித்தார். விடியலை நோக்கி, […]
15.66 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ‘எல்காட்’ டெண்டரில் பங்கேற்ற சீன நிறுவனம் ஒன்றுடன் நடைபெற்றுள்ள ஊழல் திருவிளையாடல்கள் பேரதிர்ச்சியளிக்கிறது. சீன நிறுவனம் இரு மாதிரிகளை (model) அளித்து அதன் சோதனை அறிக்கையும்(TestReport) கொடுத்திருந்தது. ஒரு மாடல் செயல்திறனுக்கு 465 மதிப்பெண்கள்; இன்னொரு மாடல் 265 மதிப்பெண்கள். ஒன்று தரம் குறைந்தது என்றாலும் இரண்டும் ஒரே விலை. அதிமுக அரசு குறைந்த செயல்திறன் கொண்ட மடிக்கணினிக்கு ஆர்டர் கொடுத்து ஒரு மடிக்கணினிக்கு ரூ.3000 விதம் அடைந்த சட்டவிரோத லாபம் […]
திமுக தலைவர் மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வழியில் பயின்றோருக்கு தமிழக அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை 2010ஆம் ஆண்டில் நிறைவேற்றி அன்றே அரசு ஆணையம் பிறப்பித்தார் முத்தமிழறிஞர் கலைஞர். துவக்கம் முதல் தமிழ்க் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு முழுபயனும் கிடைக்க வேண்டும் என பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 10 12-ஆம் வகுப்புகளையும், பத்தாம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் […]
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவ கல்லூரிகளாகச் செயல்பட்டு வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும், ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளதுபோல் கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தி பேரின்னலை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் ரூ.13,670 பல் மருத்துவ கல்லூரி கட்டணம் ரூ.11,610 இந்த கட்டணங்களை இந்த இரண்டு கல்லூரிகளிலும் வசூலிப்பது தானே […]
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு பலர தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ திருமாவளவன் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறினார். இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பகைமையை உருவாக்குதல், மத உணர்வை புண்படுத்தும் சொற்களை சொல்லுதல் உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், திமுக தலைவர் […]
அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், வெற்றிவேல் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். வெற்றிவெல் தொகுதி மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமாக பேசக்கூடியவர், இவரின் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில், பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல, அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர். எனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை […]
தமிழகத்தில் கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தல். பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் சேலம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, செங்கல்பட்டு உள்பட பல மாவட்டங்களில் ரூ.110 கோடிக்கு முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் பிரதமர் மந்திரி கிசான் திட்டத்தில் […]