#Breaking : நெருங்கும் மாண்டஸ் புயல்.! நகரும் வேகம் அதிகரிப்பு.!
மாண்டஸ் புயலின் வேகம் தற்போது சிறுது அதிகரித்து 14 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் வடதமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த புயல் சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு பகுதியில் இருந்து 170 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
அதே போல மாமல்லபுரத்தில் இருந்து தென்கிழக்கே 135 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டு நகர்ந்து வருகிறது. இதன் வேகம் முதலில் 12 கிமீ இருந்தது. அதன் பிற்காடு 10 கிமீ ஆக குறைந்தது.
தற்போது புயல் நகரும் வேகமானது 14 கிமீஆக உயர்ந்துள்ளளது. புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் புயல் கரையை கடக்க உள்ளது.