சென்னை :மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிராக ஆகஸ்ட் இன்று சென்னை, சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார்.
இந்தப் போராட்டம், வைகோ அவரை “துரோகி” எனக் குறிப்பிட்டதாகக் கூறி, 32 ஆண்டுகால தனது பொது வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியதற்கு எதிராகவும், மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு நடத்துகிறார். அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திவிட்டு, மல்லை சத்யா தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், ”கட்சியில் இருந்து வைகோவும் என்னை நீக்கவில்லை, நானும் விலகவில்லை; துணை பொதுச் செயலாளராக நீடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். துவை வைகோ கட்சிக்குள் வந்த பிறகுதான் பிரச்னை ஏற்பட்டது. தனக்கு அளிக்கப்பட்ட அநீதிக்கு மக்களிடம் நீதி கேட்கிறோம்”எனவும் தெரிவித்தார்.
மதிமுகவில் மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் இருந்து வருகின்றன.
