சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன் அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நாள்களுக்கு முன் கீழே விழுந்ததில், அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அந்த அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைகோ: மதிமுக நிறுவனர் வைகோ அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என அவரது மகன் துரை வைகோ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த மே 25ஆம் தேதி (சனிக்கிழமை) மதிமுக நிறுவனர் வைகோ நெல்லையில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னை அப்பாலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட […]
வைகோ : அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கடந்த மே 25-ம் தேதி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்த போது அன்றிரவு கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு வலது தோள்ப்பட்டையில் சிறிதளவு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை உடனடியாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு […]
சென்னை: மதிமுக தலைவர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக இன்று சென்னை மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. நேற்று நாகர்கோவிலில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவுக்கு மதிமுக தலைவர் வைகோ கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் திருநெல்வேலி வந்து இருந்தார். சகோதரர் வீட்டில் தங்கி இருந்த வைகோ இரவில் வீட்டிற்குள் தவறி விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக அவரது மகன் துரை வைகோ தெரிவித்து இருந்தார். மேலும், உடனடியாக நெல்லையில் இருந்து தூத்துக்குடி […]
Election2024: மக்களவை தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், பா.ஜக உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் […]
Kamal Haasan : நான் மக்கள் மீது கொண்ட காதல் சாதாரணமானது அல்ல, அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தல் வரவுள்ளதால், அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று திருச்சி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று […]
Election2024 : மக்களவை தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னமும், மதிமுக கட்சிக்கு தீப்பெட்டி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் , விசிக மற்றும் மதிமுக […]
Ganesha Moorthy: மதிமுகவை சேர்ந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (வயது 77) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கணேச மூர்த்தி 3வது முறை எம்பியாக இருந்து வந்த நிலையில், ஈரோடு எம்பியாக 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்தி சிட்டிங் எம்பியாக இருந்து வந்தார். இந்த சூழலில் வரும் மக்களவை தேர்தலில் மீண்டும் களமிறங்குவார் […]
DMK Alliance : மதிமுக, விசிக கட்சிகளுக்கு இன்னும் இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காமல் இருந்து வருகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதனால் பிரதான அரசியல் கட்சிகள் தவிர மற்ற சிறு சிறு கட்சிகள் தங்களுக்கான தேர்தல் சின்னங்களை கேட்டு தேர்தல் ஆணையத்தை முறையிட்டு வருகின்றனர். மதிமுக – பம்பரம் : திமுக கூட்டணியில் உள்ள மதிமுக […]
MDMK : வைகோவின் மதிமுகவிற்கு பம்பர சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் விறுவிறுப்பாக வெட்பமானு தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மக்களவை தேர்தலில் […]
DMK : மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதியுடன் ஆட்சி பொறுப்பு நிறைவடைய உள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் 543 தொகுதிகளின் ரிசல்ட் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் தமிழகம் (39) […]
DMK – MDMK : மக்களவை தேர்தல் நெருங்குவதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடை இறுதி செய்த நிலையில், விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகின்றன. Read More – திமுக – விசிக – மதிமுக.! இன்று இறுதி முடிவு எட்டப்படுமா.? முதல்வருடன் சந்திப்பு.! இன்று காலை திமுக – […]
MDMK நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. READ MORE- இறுதிக்கட்டத்தை எட்டியது திமுக கூட்டணி தொகுதி பங்கீடு! இன்று ஒப்பந்தம் கையெழுத்தா? சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி […]
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் ம.தி.மு.க. குழு […]
நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர். இதற்கிடையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் வரும் பிப்ரவரி 3-ம் தேதி […]
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் அறிவிக்கவாய்ப்புள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு ஒன்றை அமைத்து வருகின்றனர். அந்த வகையில் மதிமுக தனது தேர்தல் அறிக்கை மற்றும் பேச்சுவார்த்தை குழுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள மதிமுக கூட்டணி மற்றும் […]
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சமாக ரூ.51 லட்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்ற நிலையில் கைது செய்யப்பட்டார். அதாவது, மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி, முதலில் ரூ.20 லட்சம் பெற்ற நிலையில், மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார். […]
சென்னையில் திராவிட கழகம் தலைவர் கீ.வீரமணி தலைமையில் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க இயற்றப்பட்ட அவசர சட்ட முன் வரைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்என் றவு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முன் திராவிட கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என அக்கட்சி பொதுசியலாளர் வைகோவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு […]
ஆளுநர் வழக்கம் போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய் விட்டது என வைகோ குற்றச்சாட்டு. ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் ஆளுநரின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றசாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய […]
மனிதச் சங்கிலி பேரணி வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கருத்து. தமிழகம் முழுவதும் சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி விசிக, இடதுசாரிகள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாடு காங்., மதிமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், மக்கள் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், மதுரையில் எம்பி சு.வெங்கடேசன் தலைமையில் மனிதச் சங்கிலி பேரணி நடந்து வருகிறது. இதில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]