மதுரை மக்களே ரெடியா.? சித்திரை திருவிழா முக்கிய தேதிகள் அப்டேட்ஸ்…

Madurai Chithirai Thiruvizha 2024

Chithirai Festival : ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மதுரையில் கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவானது தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாகும். புகழ் பெற்ற இந்த சித்திரை திருவிழா எப்போது தொடங்கும் என்று அறிவிப்பை நேற்று வெளியாகி உள்ளது.

Read More – பொன்முடிக்கு புதிய சிக்கல்… ஆளுநர் ரவியின் திடீர் டெல்லி பயணம்… 

சித்திரை மாத அமாவாசை முடிந்து அதன் பிறகு வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கும். அதே போல் இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்க உள்ளது.

Read More – சித்தராமையா கருத்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… இபிஎஸ் கடும் கண்டனம்!

12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஏப்ரல் 19ஆம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 20-ஆம் தேதி திக்விஜயம் நிகழ்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி மிக முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றுதான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் நடைபெறும்.

அதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 22ஆம் தேதி மணக்கோலத்தில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்ட நிகழ்வு நடைபெறும். ஏப்ரல் 23ஆம் தேதி திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இருந்து எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை காட்டம்.!

சித்திரை திருவிழாவை காண தமிழகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தற்போதே மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு செயல்படுத்த உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்