Chithirai Festival : ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மதுரையில் கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவானது தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாகும். புகழ் பெற்ற இந்த சித்திரை திருவிழா எப்போது தொடங்கும் என்று அறிவிப்பை நேற்று வெளியாகி உள்ளது. Read More – பொன்முடிக்கு புதிய சிக்கல்… ஆளுநர் ரவியின் திடீர் டெல்லி பயணம்… சித்திரை மாத அமாவாசை முடிந்து அதன் பிறகு வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கும். அதே போல் இந்த […]
மதுரையில் உள்ள அழகர் கோவில் சித்திரை திருவிழா என்பது உலகளவில் புகழ்பெற்ற ஆன்மீக நிகழ்வாகும். சித்திரை திருவிழா நடைபெறும் கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து இன்று தான் மதுரை அழகர் கோயில், கள்ளழகர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெறுகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கிய இந்த விழா நேற்று 8 யாக குண்டலங்கள் வளர்க்கப்பட்டு இன்று ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேம் நடைபெற்றது. ஐயப்ப […]
உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில்,வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி,பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து வைகை ஆற்றின் நடுவே அறநிலையத்துறை அமைந்திருந்த மண்டகப்படியில் கம்பீரமாக கள்ளழகர் எழுந்தருளினார்.இதனை காண வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடி,பாடி […]
உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு சற்று முன்னர் கோலாகலமாக நடைபெற்றது.கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில்,வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு இன்று பக்தர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி,பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து வைகை ஆற்றின் நடுவே அறநிலையத்துறை அமைந்திருந்த மண்டகப்படியில் கம்பீரமாக கள்ளழகர் எழுந்தருளினார்.இதனை காண வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடி,பாடி மகிழ்ந்தனர்.
மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,கடந்த ஏப்.12 இல் கள்ளழகர்,அழகர் கோவிலில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். இந்நிலையில்,மதுரை வைகை ஆற்றில் நாளை கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி,அதிக அளவு தண்ணீர் வருவதால் நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். எனினும்,வைகை ஆற்றின் கரையோரங்களில் மட்டும் நின்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது கடந்த ஆண்டு அணையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீர் திறக்க படவில்லை ஆனால் சில நாட்களாக பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு நீர்வரத்து தொடந்து வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று 37.96 அடியாக இருந்தது மொத்தம் 71 அடி என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை,ஆண்டிபட்டி,சேடபட்டி ஆகிய […]