Chithirai Festival : ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மதுரையில் கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவானது தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாகும். புகழ் பெற்ற இந்த சித்திரை திருவிழா எப்போது தொடங்கும் என்று அறிவிப்பை நேற்று வெளியாகி உள்ளது. Read More – பொன்முடிக்கு புதிய சிக்கல்… ஆளுநர் ரவியின் திடீர் டெல்லி பயணம்… சித்திரை மாத அமாவாசை முடிந்து அதன் பிறகு வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கும். அதே போல் இந்த […]
மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,கடந்த ஏப்.12 இல் கள்ளழகர்,அழகர் கோவிலில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். இந்நிலையில்,மதுரை வைகை ஆற்றில் நாளை கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி,அதிக அளவு தண்ணீர் வருவதால் நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். எனினும்,வைகை ஆற்றின் கரையோரங்களில் மட்டும் நின்று சாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஏப்.16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஏப்.16-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அன்று மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏப்-16ல் கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள் குறைந்த அளவு ஊழியர்களுடன் […]
சித்திரைப் பெருவிழா முன்னிட்டு அன்னதானத்துக்கு உணவுத்துறை அனுமதி அவசியம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகர் மண்டகப்படிகளில் அன்னதானம் வழங்குவதால் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாத உணவுகள் உள்ளிட்டவை பாதுகாப்பான உணவாக செயற்கை சாயங்கள் எதுவும் […]
புதுக்கோட்டை,தஞ்சை மாவட்டங்களுக்கு ஏப்ரல் 11,13 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார். நார்த்தமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல,தஞ்சை மாவட்டத்திற்கு ஏப்ரல் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பக்தர்களின்றி நடைபெற்றது. மேலும், திருக்கல்யாணம் , திக் விஜயம் உள்ளிட்ட விழாக்களும் பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16-ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும், காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரத நாட்டியம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இன்று அதிகாலை 4 மணி யளவில் பெரிய கோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத் பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக முத்துமணி அலங்கார சப்பரத் தில் புறப்பட்டு தேர் […]
சித்திரை திருவிழா நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தொடங்கியது இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 9.15 மணிக்கு திரளான பக்தர்களுக்கு மத்தியில் திருக்கொடியேற்றம் நடந்தது. அதன்பிறகு அன்னதானம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உணவு அருந்தினர். இரவில் பக்தி இன்னிசையை தொடர்ந்து புஷ்பக வாகனத்தில் சாமி எழுந்தருளினார். திருவிழாவின் […]