மதுரையில் 11 வயது சிறுமி கொலையில் திருப்பம்! வன்கொடுமை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு

Madurai: மதுரையில் 11 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பமாக அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போது இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

Read More – திருச்சி என்றாலே திருப்புமுனை! பாஜகவை வீழ்த்தி… தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு

கூடல் புதூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் நேற்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரின் உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

இந்த வழக்கை சந்தேக மரணமாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் சிறுமி மரணத்தில் அதிர்ச்சி திருப்பமாக அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Read More – பாமக வேட்பாளர் பட்டியலில் அதிரடி மாற்றம்..! அன்புமணி ராமதாஸ் மனைவி தர்மபுரியில் போட்டி

இதனைத் தொடர்ந்து சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.இவ்வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்