ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

Bank accounts of Kodanad and Curzon estates owned by Jayalalithaa and Sasikala frozen.

ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உச்சகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டியிருக்கிறது.

வரி பாக்கி நிலுவையில் இருப்பதாகவும், வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதாலும் 2 எஸ்டேட்களின் வங்கிக் கணக்கை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கோத்தகிரி ஈளாடாவில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள எஸ்டேட்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

மேலும், எஸ்டேட்களின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் 700க்கும் மேற்பட்ட எஸ்டேட்டில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.