கரூர் துயரம் : என் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை சந்திக்கவில்லை...விஜய் வேதனை!

எனது வாழ்க்கையில் வலி மிகுந்த தருணம் இது என கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

tvk vijay video

கரூர் :தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் முதல் முறையாக வீடியோ மூலம் தனது வேதனையைப் பகிர்ந்தார். “என் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரமான சம்பவத்தை சந்திக்கவில்லை. மக்களின் பாதுகாப்பே முக்கியம். இனி முழு பாதுகாப்பு உள்ள இடங்களை மட்டுமே கேட்போம்,” என்று அவர் உருக்கமாகக் கூறினார்.

விஜய் மேலும், “பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், மக்களின் பாதுகாப்பு முதன்மையானது. விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும். பாதிக்கப்பட்டவர்களை கூடிய விரைவில் சந்திப்பேன்,” என்று உறுதியளித்தார். தவெக தலைவராக, இந்த சம்பவத்தால் தான் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும், சூழலைப் புரிந்து ஆதரவு தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி கூறியதாகவும் தெரிவித்தார்.

இந்த வீடியோ வெளியீடு, தவெகவின் முதல் அதிகாரப்பூர்வ பதிலாக அமைந்துள்ளது. “இனி மக்கள் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வோம்,” என்று விஜய் வலியுறுத்தினார்.

unknown node