"முகவரி இல்லாத கடிதத்திற்கு ஏன் பதில் போட வேண்டும்? விஜய் குறித்த கமல்ஹாசன்.!

முகவரிக்கு இல்லாத கடிதத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று விஜய்யின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

Kamal Haasan Vijay

சென்னை :மதுரையில் நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாட்டில் பேசிய விஜய், நான் ஒன்றும் ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார்.

இது கமல்ஹாசனை மறைமுகமாகக் குறிப்பிடுவதாகக் கருதப்பட்டு, செய்தியாளர்கள் கமலிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். எம்.பி.-யும், மநீம தலைவருமான கமல்ஹாசன், இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில், “விஜய் எனக்கு தம்பி” என்றும், “அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை, முகவரி இல்லாத கடிதத்திற்கு நான் ஏன் பதில் போட வேண்டும்?” என்றும் தெரிவித்தார்.

இது அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்துவதாகவும், விஜய்யுடனான நட்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்துவதாகவும் பலரால் பார்க்கப்பட்டது. இந்த பதில், கமல்ஹாசனின் அரசியல் அனுபவத்தையும், விமர்சனங்களைப் பொறுமையாகக் கையாளும் திறனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.