முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு இறந்தார் இதில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள மூத்த மருத்துவர்களிடம் கலந்தாலோசித்ததாக அப்போலோ மருத்துவர் கூறியுள்ளார்.
unknown nodeஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒரே நாளில் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், சிகிச்சை தொடர்பாக அமெரிக்காவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக அப்பலோ மருத்துவர் செந்தில்குமார் சாட்சியம் அளித்தார் என்று கூறியுள்ளார்.
unknown nodeஇந்நிலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட உணவுகளால் மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் அதனால் அவர் உயிரிழக்கவும் இல்லை என்றும் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஷ்வரி கூறியதாக ராஜசெந்தூர் பாண்டியன் குறிப்பிட்டார்.
unknown nodeஆணையத்தின் செயலளர் கோமளாவை மாற்ற வேண்டுமென்றும் மனு என அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும்ஜெயலலிதாவுக்கான சிகிச்சை தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள மூத்த மருத்துவர்களிடம் கலந்தாலோசித்ததாக அப்போலோ மருத்துவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று டாக்டர் சிவகுமாருக்கு 5 வது முறையாக சம்மன் அனுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU