“அப்போலாவில் ஜெயலலிதா இருந்த போது ஒரு நாள் கூட என்னைப் பார்க்க விடவில்லை” என்று பகீர் தகவலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
unknown nodeபன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.
மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
unknown nodeஇந்நிலையில் ஜெயலலிதா குறித்து பகீர் தகவலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.அவர் கூறுகையில், “அப்போலாவில் ஜெயலலிதா இருந்த போது ஒரு நாள் கூட என்னைப் பார்க்க விடவில்லை” .மேலும் நிர்வாகத்திடம் ஜெயலலிதாவை சிகிச்சைக்கு அமெரிக்காவிற்கு அழைத்து செல்லக் கேட்டப்போது எங்கள் சிகிச்சை மேல் நம்பிக்கை இல்லையா என்று அப்பல்லோ நிர்வாகம் சமளித்துவிட்டது என்று பகீர் தகவலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.