போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை விட குறைந்த எண்ணிகையிலான வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்,போடி தொகுதியில் அதிமுக சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்,திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். இந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து,காலை 11 மணி நிலவரப்படி போடி […]
முதல்வரின் தாயார் மறைவிற்கு துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் முதல்வரின் தாயார் மறைவிற்கு துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில்: முதல்வரின் அவர்களின் […]
ஜனாதிபதி ஸ்ரீ.ராம் நாத் கோவிந்த்க்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்தியுள்ளார். பாஜக கட்சியினை சேர்ந்த ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக தற்பொழுது பணியாற்றி வருகிறார். அக்டோபர் ஒன்றாம் தேதி1945 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இன்றுடன் 75 வயது ஆகிறது. இந்நிலையில் இவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் துணை முதல்வராகிய ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது […]
இன்று கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காவல் துறையினர் அண்ணா சிலை பீடத்தில் கட்டப்பட்ட காவி கொடியை அகற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அண்ணா சிலைஅவமதிப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள துணை முதல்வர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை […]
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் வாழும் குடிசை வாழ் மக்களுக்கு, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 300 சதுரடி பரப்பளவில் வீடுகளை கட்டி கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
“அப்போலாவில் ஜெயலலிதா இருந்த போது ஒரு நாள் கூட என்னைப் பார்க்க விடவில்லை” என்று பகீர் தகவலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது. பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று […]