மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் 506 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட த.வெ.க தலைவர் விஜய் பாஜக மற்றும் திமுக குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். குறிப்பாக த.வெ.கவின் ஒரே கொள்கை எதிரி பாஜக…ஒரே அரசியல் எதிரி திமுக தான் எனவும் தெரிவித்தார். அத்துடன் முதல்வர் மு.க ஸ்டாலின் பற்றியும் காட்டத்துடன் பேசி கடுமையாக விமர்சனம் செய்தார்.
இது குறித்து பேசிய விஜய் ” திமுக அரசு பாஜக கூட்டணியுடன் உள்ளுக்குள் உறவு ஒன்றை வைத்து கொண்டு வெளியே எதிர்ப்பது போல ஒரு நாடகம் ஒன்றை ஆடிக்கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தால் போங்க மோடி என்று பலூன் விடுவது..ஆளும் கட்சியாக இருந்தால் குடையை பிடித்துக்கொண்டு வாங்க மோடி என்று கும்பிடு போடுவது. இது மட்டுமா? ரெய்டு என்று ஒன்று வந்துவிட்டால் இதுவரை போகத ஒரு மீட்டிங்.
ரெய்டு வந்தவுடன் வேகமாக டெல்லிக்கு செல்வது அங்கு சென்று அங்கு ரகசியமாக ஒரு மீட்டிங் நடத்துவது. மக்களே நீங்கள் நல்லா நோட் பண்ணுங்க அந்த மீட்டிங்கிற்கு பிறகு இந்த சர்ச்சை அப்படியே காணாமல் போய்விட்டது. ஸ்டாலின் அங்கிள் இஸ் வெரி ராங் அங்கிள்” என கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய விஜய் ” தமிழ் நாட்டில் இப்போது நடக்கும் இந்த ஆட்சியின் லட்சணத்தை பார்த்துவிட்டு நாம் எப்படி சும்மாக இருக்க முடியும். ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அது கபட நாடக ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும்..அங்கிள் அங்கிள் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
நீங்கள் நடத்துகின்ற இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா ? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? சொல்லுங்க MY DEAR STALIN UNGLE அவர்களே..டாஸ்மாக்கில் மட்டும் கிட்டத்தட்ட 1000 கோடிகளுக்கு மேல் ஊழல் நடப்பதாக சொல்கிறார்கள். அதில் மட்டுமா? ஊழல் நடக்கிறது? உலகத்தில் மிஸ்டர் க்ளீன் என்பதை உங்களுக்கு உங்களுடன் இருப்பவர்களுக்கு தான் கொடுக்கணும் அங்கிள்.
இதனை பார்த்து வாயில்லாத ஊர் கூட பார்த்து சிரிக்கிறது. பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்துவிட்டீர்கள் என்றால் போதுமா அங்கிள்? அப்படியே அதனை மூடி மறைத்துவிடலாம் என நினைக்கிறீர்களா? பெண்கள் படிக்க செல்லும் இடத்தில் பாதுகாப்பு கூட இல்லை என்று சொல்கிறார்கள். அந்த கதறல் சத்தம் உங்களுடைய காதில் கேட்கிறதா? ஸ்டாலின் அங்கிள் இதில் வேற உங்களை அப்பா என்று சொல்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்…வாட்டிஸ் அங்கிள் இஸ் வெரி..வெரி ராங் அங்கிள்.
பெண்களை மட்டுமா? அரசியல் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுகிறீர்கள்…அரசு ஊழியர்கள்..ஆசிரியர்கள்…விவசாயிகள் பரந்தூரில் பாதிப்பு வராது என்று சொல்லி ஏமாற்றுகிறீர்கள் .மீனவர்களை ஏமாற்றுகிறீர்கள்..போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிப்போம் என ஏமாற்றுகிறீர்கள்..ஐயோ வெரி வெரி வோஸ்ட் அங்கிள்” எனவும் விஜய் விமர்சித்து பேசியுள்ளார்.
