நெற்பயிருக்கான காப்பீடு – வேளாண்துறை அமைச்சர் விளக்கம்!

The Minister explained that insurance for samba crops will be announced soon as the harvest is in progress.

அறுவடை நடந்து வரும் நிலையில், சம்பா பயிர்களுக்கான இன்சூரன்ஸ் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் விளக்கம்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், குறுவை சாகுபடி முடிந்து, சம்பா சாகுபடி நடைபெறுகிறது. 3.35 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 665 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், எப்படி குறுவை சாகுபடிக்கு பயிர்காப்பீடு கட்ட சொல்ல முடியும்? என்றும் மூன்றரை லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பயிர்காப்பீடு எப்படி வழங்குவது என்று கேள்வி எழுப்பினார்.

அறுவடை நடந்து வரும் நிலையில், சம்பா பயிர்களுக்கான இன்சூரன்ஸ் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், அரசு மீது காழ்புணர்ச்சியின் காரணமாக நெற்பயிருக்கான காப்பீடு குறித்து அவதூறு பரப்புகிறார்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.