தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு கணக்கெடுக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தல். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் தர வேண்டும். பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய […]
எதிர்கால பாதிப்புகளை சமாளிக்க பயிர்க்காப்பீடு அவசியமாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல். சம்பா பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை 2 வாரங்கள் நீடிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் சம்பா நடவு மற்றும் விதைப்புப் […]
பயிர் சேதமடைந்த பிறகு காப்பீடு செய்ய இயலாது என்று விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல். தமிழ்நாட்டில் சம்பா, தாளடி, பிசான பருவ நெற்பயிரை நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்ட விவசாயிகள் நெற்பயிரை நவ.15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்று, மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், […]
அறுவடை நடந்து வரும் நிலையில், சம்பா பயிர்களுக்கான இன்சூரன்ஸ் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் விளக்கம். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், குறுவை சாகுபடி முடிந்து, சம்பா சாகுபடி நடைபெறுகிறது. 3.35 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 665 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், எப்படி குறுவை சாகுபடிக்கு பயிர்காப்பீடு […]
பயிர்காப்பீடு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் முன்பியிருந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் பங்களிப்பினை குறைக்கும் வகையில் உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்பியிருந்தபடி மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில், வேளாண்துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என ஏற்கனவே தமிழக […]