நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி திமுகவில் இணைகிறார்.!

It has been reported that Rajiv Gandhi, who left the Tamil Party, has an internet presence in the DMK.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ்காந்தி திமுகவில் இணைய இருப்பதாகவ தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜீவ் காந்தி திமுகவில் இணைய உள்ளார். சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் சற்றுநேரத்தில் ராஜீவ் காந்தி இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியின் இருந்த ராஜீவ் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென கட்சியிலிருந்து விலகினார். கட்சின் தலைவர் சீமானுக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தார் ராஜீவ் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுகவில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.