“விஜய் அரசியலை வரவேற்கிறேன்., மகிழ்ச்சி.,” பா.ரஞ்சித் ஆதரவு.!
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு, பிரிவினை வாதத்திற்க்கும், ஊழலுக்கும் எதிராகசெயல்படபோவதாக அறிவித்த விஜய் அரசியலை வரவேற்கிறேன். - இயக்குனர் பா.ரஞ்சித்.

சென்னை : விஜயின் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பல்வேறு அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக பேசி தனது முதல் அரசியல் மாநாட்டு உரையை நிகழ்த்தியுள்ளார்.
அதில். பிறப்பொக்கும், எல்லா உயிர்க்கும் என அனைவரும் சமம் என்றும், கூட்டணியில் ஆட்சியில் பங்கு, சாதி மத வர்க்க பிரிவினைவாதத்திற்கு எதிர்ப்பு என பல்வேறு கருத்துக்களை பேசியிருந்தார். அவர் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த மாநாடு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில், ” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அண்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் ????????????@actorvijay na அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “…
— pa.ranjith (@beemji) October 27, 2024