சென்னை : தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை பார்த்துவிட்டு ஐயோ இந்த படத்தை தியேட்டரில் பார்த்திருக்கலாம் என கூறி வருகிறார்கள். தங்கலான் தங்க சுரங்கத்தில் படம் எடுக்கப்பட்டதால் கேஜிஎப் அளவுக்கு படம் எடுக்கப்பட்டு வருகிறது என படம் எடுக்கும் சமயத்தில் தகவல்கள் வெளியான காரணமே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகமாக முக்கிய காரணம் என்றே கூறலாம். அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில், படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியீட்டு 500 கோடி வசூலுக்கு ஸ்கெட்ச் […]
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் பல்வேறு கட்சி பிரமுகர்கள் , வழக்கறிஞர்கள் , ரவுடிகள் என 30 பேர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ரவுடி திருவெங்கடம் என்பவர் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு ஆனந்த் என்பவர் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி […]
சென்னை : விஜயின் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பல்வேறு அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக பேசி தனது முதல் அரசியல் மாநாட்டு உரையை நிகழ்த்தியுள்ளார். அதில். பிறப்பொக்கும், எல்லா உயிர்க்கும் என அனைவரும் சமம் என்றும், கூட்டணியில் ஆட்சியில் பங்கு, சாதி மத வர்க்க பிரிவினைவாதத்திற்கு எதிர்ப்பு என பல்வேறு கருத்துக்களை பேசியிருந்தார். அவர் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த […]
சென்னை : ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்தி வருவது தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், போராட்டத்தில் இருந்த சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தது பல தரப்பில் இருந்து கண்டனங்களை எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. Read More- மீண்டும் போராட்டம்., சாம்சங் ஊழியர்கள் அதிரடி கைது.! ஊழியர்களை கைது செய்தது தொடர்பாக அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக […]
சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்காலன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட்-15ல் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் 100-110 கோடி வரையில் பட்ஜெட்டில் உருவாகி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த படம் தற்போது 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி பார்த்தால் தயாரிப்பாளருக்கு இதுவரை பெரிதளவு லாபம் இதுவரை ஈட்டவில்லை என்றாலும் வரும் வாரத்தில் லாபம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
சென்னை : கர்ணன், மாமன்னன் ஹீரோக்கள் திருப்பி அடித்த காரணத்தால் மக்களுக்கு படம் பிடிக்கவில்லை என பா.ரஞ்சித் கூறியதை தொடர்ந்து ஆர்யா திருப்பி அடிச்ச சார்பட்டா படம் மக்களுக்கு பிடித்து என ப்ளூ சட்டை கூறியுள்ளார். பா.ரஞ்சித் பேச்சு இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வாழை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது “மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறீர்கள். அது என்னவென்றால், பரியேறும் பெருமாள் படம் தான் நல்ல […]
சென்னை : ‘சார்பட்டா பரம்பரை’ தேசிய விருதுகளில் நிராகரிக்கப்பட்ட காரணத்தை இயக்குனர் பா.ரஞ்சித் வேதனையுடன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி கொண்டாடப்பட வேண்டிய படங்களில் ஒன்று ‘சார்பட்டா பரம்பரை’. ஆனால், இந்த படம் கொரோனா காலகட்டத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான இந்த படத்தை பார்த்து மக்கள் கொண்டாடினார்கள். இந்த படம் அரசியல் காரணங்களுக்காக தேசிய விருதுக்காக அனுப்பப்பட்ட போது நிராகரிக்கப்பட்டது என பா.ரஞ்சித் கூறியிருக்கிறார். சென்னையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி […]
சென்னை : எங்க படத்தை மோசமா விமர்சிக்கிறார்கள் எனவும், கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் சிலருக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற காரணம் குறித்தும் பா.ரஞ்சித் பேசி இருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் வாழை படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், மிஷ்கின், பா.ரஞ்சித், ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படம் பற்றியும், இயக்குனர் […]
சென்னை : தங்கலான் படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், மக்கள் படத்தில் பாசிட்டிவாக 2 விஷயங்கள் மட்டும் தான் இருக்கிறது என்று கூறிவருகிறார்கள். அது என்னென்ன விஷயங்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம். 1.விக்ரம் நடிப்பு விக்ரம் பொறுத்தவரையில் தங்கலான் படம் மட்டுமின்றி, இதற்கு முன்னதாக அவர் நடித்த படங்கள் எல்லாமே அவருடைய நடிப்பை வெளிக்காட்டும் வகையில் கடினமான கதாபாத்திரமாக தான் இருக்கும். அப்படியான கதாபாத்திரங்களை தான் விக்ரம் தேர்வு செய்து […]
சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனத்தையும், விக்ரம் நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் ஆக 15-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் கால்டாகிரோன், பசுபதி மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். […]
சென்னை : தங்கலான் படத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் காண்பிக்கப்படும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று படத்திற்கான பிரஸ் மீட் நடந்தது. அதில், இயக்குனர் பா ரஞ்சித், மாளவிகா மோகனன், விக்ரம், […]
சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் புதிய தோற்றத்தில் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா மற்றும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 உடன் மோதவுள்ளது. முன்னதாக, கடன் பிரச்னையில் படத்தை வெளியிடும் முன் 1 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என […]
தங்கலான் : பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரம் மிகவும் கடினமாக உழைத்துள்ளார் என்றே சொல்லலாம். எனவே, கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்பட்டு அவருக்கு வெற்றிப்படமாக அமையவேண்டும் எனவும் அவருடைய ரசிகர்கள் அவரும் காத்திருக்கிறார்கள். விக்ரம் போலவே இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனனும் தங்கலான் படத்தின் வெற்றிக்காக தான் காத்திருக்கிறார். ஏனென்றால், […]
தங்கலான் : விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் மும்மரமாக நடைபெற தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக படத்தின் பிரபலங்கள் அனைவரும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தனர். அந்த பேட்டியில் கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் […]
தங்கலான் : பொதுவாகவே ஒரு படத்திற்கு ப்ரோமோஷன் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் என்றே சொல்லலாம். ஏனென்றால், சமூக வலைத்தளங்களை பொறுத்தவரையில் பாடல்களை வெளியீட்டு ப்ரோமோஷன் செய்துவிடலாம். ஆனால், வெளியே பல இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்தால் மட்டும் தான் படம் வெளியாவது என்பது பலருக்கும் தெரியும். ஒரு சில படங்களுக்கு சரியாக ப்ரோமோஷன் செய்யப்பட்டாலும் சில படங்கள் சரியாக ப்ரோமோஷன் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் வந்துவிடும். அப்படி தான் தற்போது தங்கலான் படத்திற்கு விமர்சனம் […]
ஜி.வி.பிரகாஷ்: சியான் விக்ரம் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல, இப்படத்தின் ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ட்ரைலரில் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை பேசப்பட்டது. அதே போல படத்திலும் பின்னணி இசை நன்றாக இருக்கும் என […]
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் மாநில தலைவர் தலைநகர் பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் […]
தங்கலான் : இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பீரியட் ஆக்ஷன் திரைப்படம் “தங்கலான்” ஒன்று. இந்த படத்தை இயக்குனர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் பேனரில் பிரபல தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். தங்கலான் திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டீசரில் விக்ரம் கெட்டப் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்படி, […]
சென்னை: பெரம்பூர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அன்று மர்ம கும்பலால் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவம் தங்களுடைய கண்டனங்களை பதிவுசெய்து வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சென்னை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 8 பேர் […]
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக கட்சி அலுவலகம் அல்லது வேறு பொது இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வேதனையுடன் […]