சென்னை :தமிழ்நாடு அரசியல் சூழலில், குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமமுகவின் டிடிவி தினகரன் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளை விமர்சித்து, என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதற்கு காரணமாக, நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் தான் காரணம், கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியது குறித்த நயினாரின் பேச்சு ஆணவம் மிக்கது. பாஜக கூட்டணியை அண்ணாமலை சரியாக கையாண்டார், நயினாருக்கு கையாளத் தெரியவில்லை” என்று தினகரன் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், இதற்கு அளிக்கும் விதமாக செய்தியாளர் சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், ”’கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய பிறகு அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க முடியாது,அவர் ஏன் அப்படி பேசினார் என எனக்கு தெரியாது.
டி.டி.வியும் – ஓ.பி.எஸ்ஸும் சொல்லி வைத்துக் கொண்டு மாறி மாறி குற்றஞ்சாட்டுகிறார்களா? என தெரியவில்லை நான் யாரிடமும் ஆணவமாக நடந்து கொள்பவன் இல்லை” என்று கூறியுள்ளார்.
