சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று, மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து வாசித்தார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அரிட்டாபட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் கருத்துக்களை பரீசலித்து கொண்டு இந்த சுரங்கம் அமைக்கும் […]
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருந்த சமயத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை புறப்பட இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 3 பேரிடம் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் 6 பைகளில் 4 கோடி ரூபாயை […]
சென்னை : 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலியை நோக்கி புறப்பட்ட ரயிலில் பயணித்த நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், நெல்லை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனின் உணவகத்தில் பணியாற்றும் 3 பேரிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை […]
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம் தேதி இந்த தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது சதிஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று நபர்களிடம் இருந்து சுமார் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதன்பின் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் […]
Election2024 : நயினார் நாகேந்திரன் தொடர்புடைய 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தில் மறுத்துள்ளது அமலாக்கத்துறை. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட மக்களவை தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் வாக்குப்பதிவு சமயம் வரையில் தேர்தல் பறக்குப்படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை பாஜக வேட்பாளரும், பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தொடர்புடைய […]
Nainar Nagendran: ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன். தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கையில் மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். […]
Election2024: சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும்படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் […]
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் உரையாற்றுவதற்கு தமிழக ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆளுநர் ஆர்.என். ரவி, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார். இதன்பின் ஆங்கிலத்தில் உரையாற்றிய ஆளுநர், கூட்டத்தொடரில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் ஒலிபரப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஆளுநர், […]
இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் உள்ள எண்ணூரில் செய்தியர்களுக்கு பேட்டியளித்தபோது, தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் என முதல்வரின் அறிவிப்பை மு. க ஸ்டாலின் உள்ளிட்டோர் பலர் வரவேற்பை தெரிவித்துள்ளனர். மேலும், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கடைபிடித்த கொள்கைதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைப்பிடிக்கிறார். மொழித் திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோமே தவிர மொழி கற்றுக்கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை என கூறினார். […]