#Breaking:மேலும் இந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Holidays have been declared for schools and colleges in Pondicherry and Karaikal in response to the continuous rains.

புதுச்சேரி,காரைக்கால் மற்றும் சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால்,மயிலாடுதுறை,தேனி, திண்டுக்கல்,விருதுநகர்,தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, தஞ்சாவூர்,அரியலூர்,பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,,கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதைப்போல,கன்னியாக்குமரி மாவட்டத்தில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தொடர்மழை எதிரொலியாக புதுச்சேரி,காரைக்கலில் இன்றும்,நாளையும் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சென்னையிலும் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல,முன்னதாக விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.