திமுக அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு மற்றும் நெல் சாகுபடி பரப்பை முறையாக கணக்கெடுக்காததால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குறிப்பாக,கடந்த 10 நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்திருந்தும்,பல நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை என்றும் கடந்த சில நாட்களாக […]
தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்,பல்வேறு பகுதிகள் தொடர் மழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் 1000 மிமி அளவு மழை பதிவாகியுள்ளது.மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று […]
புதுச்சேரி,காரைக்கால் மற்றும் சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால்,மயிலாடுதுறை,தேனி, திண்டுக்கல்,விருதுநகர்,தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, தஞ்சாவூர்,அரியலூர்,பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் […]