பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு! – பள்ளிக்கல்வித்துறை

Release of Government of Tamil Nadu Guidelines on Opening of Schools for Classes I to VIII on 1st November.

நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பதமானால் தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மீண்டும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை அன்புடன் வரவேற்போம் என்றும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதன் மூலமாக எதிர்கால மனித ஆற்றலை உருவாக்குவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. மாணவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு முதல் முறையாக பள்ளிக்கு வருவதால், கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட மன மகிழ்ச்சி செயல்பாடுகளை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

1 முதல் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு 15 நாட்கள் வரை மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வகுப்புகளை நடத்த வேண்டும். புத்தாக்க பயிற்சி, முதன்மை பாடத்திட்டம் ஆகியவற்றை சிறுது கால அவகாசத்திற்கு பிறகு பின்பற்றவேண்டும்.

2 முதல் 5ம் வகுப்பு வரை 50 நாட்களுக்கு புத்தாக்க பாடத்திட்டத்தை நடத்த வேண்டும். பள்ளிகளை திறந்தவுடன் 1 முதல் 8ம் வகுப்பு வரை முதல் நாளே பாடத்திட்டங்களை தொடங்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.