#BREAKING: தமிழகத்தில் மேலும் இந்த 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி..!

The Government of Tamil Nadu has given permission to hold Jallikattu in Krishnagiri, Vellore, Tirupati and Sivagangai districts.

மதுரை, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு வழங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாளை மறுநாள் முதல் 31-ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 கிராமங்களிலும், திருப்பத்தூரில் 13 கிராமங்களிலும், வேலூர் மாவட்டத்தில் 25 கிராமங்களிலும், சிவகங்கையில் ஒரு இடத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.