Tag: jallikattu

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு நிறைவு! 10 காளைகளை அடக்கிய அபிசித்தர் முதலிடம்

மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி அலங்காநல்லூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குட்டிமேக்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமம் வகுத்துமலை அடிவாரத்தில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ஏறுதழுவதல் அரங்கம் அமைக்கப்பட்டது. அதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் […]

jallikaddu 4 Min Read

பல்வேறு தடைகளை தகர்த்து ஜல்லிக்கட்டை மீட்டது திமுக.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

இன்று  மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள கீழக்கரை கிராமத்தில் வகுத்தமலை அடிவாரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 5000 பேர் ஒரே இடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை காணும் வகையில் 66 ஏக்கரில் பிரமாண்டமாக இந்த ஜல்லிக்கட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த பிரமாண்ட மைதானத்தை முதல்வர் திறந்து வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மேடையில் உரையாற்றினார். அவர் பேசுகையில், ஜல்லிக்கட்டை […]

jallikattu 11 Min Read
MK Stalin - Alanganallur Kilakarai Jallikattu stadium

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழரின் வீரவிளையாட்டு போட்டியாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஆண்டுதோறும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் அங்கு பார்வையாளர்கள் பார்க்கும்படியான வசதிகள் முழுமையாக இல்லை. இதனால்,  பார்வையாளர்களை கருத்தில் கொண்டு அனைவரும் பார்க்கும்படியாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்தை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் வகுத்தாமலை அடிவாரத்தில் தமிழக அரசு பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு, 44 கோடி ரூபாயில் 66 ஏக்கர் பரப்பளவில் கட்டி முடித்தது. […]

Alanganallur - Kilakarai Jallikattu 6 Min Read
Jallikattu

ஜல்லிக்கட்டு காளைக்கு உயிரோடு சேவல் – 3 பேர் மீது வழக்குப்பதிவு.!

சமீபத்தில், ஜல்லிக்கட்டு காளைக்கு வலுக்கட்டாயமாக சேவல் ஊட்டுவது போன்ற வீடியோ ஒன்றை யூடியூபர் ஒருவர் பகிர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கிய நிலையில், கால்நடைகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, இந்த புகாரை ஏற்றுக்கொண்ட சேலம் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. தற்பொழுது, இது தொடர்பான விசாரணையில் […]

jallikattu 4 Min Read
Jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு.? கலெக்டரிடம் புகார் அளித்த மாடுபிடி வீரர்.!

கடந்த ஜனவரி 17ஆம் தேதி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. கீழக்கரை ஜல்லிக்கட்டு – […]

Abhi Siddhar 4 Min Read
Abi Siddhar - Alanganallur Jallikattu 2024

650 காளைகளும், 350 காளையர்களும்.. விறுவிறுப்பாக தொடங்கிய புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சியாக நடைபெறும். அந்தவகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக, தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. அதன்படி, இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே பல பகுதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில் தச்சங்குறிச்சியில் கடந்த ஜன.6ம் தேதி தொடங்கி […]

jallikattu 5 Min Read
puthukottai jallikattu

புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதியில்லை.! ஆட்சியர் உத்தரவு.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக்த்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஜல்லிக்கட்டு போட்டிகள் என்பது வாடிவாசல் வழியாக வரிசையாக ஒவ்வொரு ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும். அதனை வாடிவாசல் அருகே மாடுபிடி வீரர்கள் பிடிப்பார்கள். சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் மேலும் ஒருவர் பலி!  இதில் மாடுகள் பிடிபட்டால் வீரர்கள் வெற்றி என்றும் , மாடு பிடிபடவில்லை என்றால் மாடு வெற்றிபெற்றது என்றும் அறிவிக்கப்படும். […]

jallikattu 5 Min Read
Manjuvirattu 2024 Pudukottai

விறுவிறுப்பாகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! காளைகள் முதல் டாஸ்மாக் வரை கட்டுப்பாடுகள் தீவிரம்.!

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாளை (ஜனவரி 15 பொங்கல் தினத்தில்) அவனியாபுரத்திலும் அடுத்து (ஜனவரி 16 மாட்டு பொங்கல் அன்று) பாலமேட்டிலும் அதற்கு அடுத்ததாக ஜனவரி 17 காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூர் பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. நாளை அவவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு […]

Avaniyapuram 6 Min Read
Avaniyapuram Jallikattu

திருச்சியில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.! 14 இடங்களில் அனுமதியில்லை

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமானது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி அந்த போட்டி தான். அதனை தொடர்ந்து அடுத்ததாக மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைத்திங்கள் அன்று (அதாவது ஜனவரி 15-ம் தேதி) நடைபெற உள்ளது. அதைப்போல, பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ம் தேதி என […]

jallikattu 4 Min Read
jallikattu

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை- நீதிமன்றம் உத்தரவு..!

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைத்திங்கள் அன்று (அதாவது ஜனவரி 15-ம் தேதி) நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் ஒன்றை செய்தனர். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு  நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன் […]

Avaniyapuram 4 Min Read

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்துக்கு இதுதான் பெயர்!

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரபலமானது. அந்த வகையில் இந்த ஆண்டு அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கிடையில், கடந்த 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார்.  அதனை […]

#Madurai 4 Min Read
jallikattu stadium

ஜல்லிக்கட்டு போட்டிகள்… 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் பதிவு – அமைச்சர் மூர்த்தி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரபலமானது. இதனை கண்டு ரசிக்க ஒரு கூட்டமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் […]

#Madurai 5 Min Read
minister moorthy

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது. முகூர்த்தக்கால் நடும் விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது உலக பிரசித்தி பெற்றவை. இந்த மூன்று இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண தமிழ்நாடு மட்டும் இல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்து […]

alanganallur 4 Min Read
Jallikattu - Madurai

மதுரையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்… ஜனவரி 23ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழர்களின் வீர விளையாட்டும், தனிச்சிறப்பு மிக்க மரபு அடையாளமாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. இந்த சூழலில், மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். அதன், அடிப்படையில், மதுரையில் பிரமாண்டமாக ரூ.44 கோடியில் சுமார் 67 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இந்த அரங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் அரை வட்ட வடிவில் கட்டப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாடுபிடி […]

#Madurai 4 Min Read
jallikattu stadium

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு! சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு பல்சர் பைக் பரிசு!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர். பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் நேரில் சென்று கண்டுகளித்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும், 297 மாடுபிடி […]

jallikattu 4 Min Read
Thatchankurichi Jallikattu

முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி… ஆர்வமுடன் கண்டு ரசிக்கும் மக்கள்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் ஜனவரி மாதம் நடைபெறும். அதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதில்,  746 காளைகள் பங்கேற்றன. இந்த நிலையில், முதல் முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் […]

#Srilanka 4 Min Read
SriLanka Jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எந்த இடத்தில் நடைபெறும்.? வெளியான முக்கிய அறிவிப்பு.!

ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். 9 வருட பாஜக ஆட்சியே பெரிய பேரிடர் தான்… அமைச்சர் உதயநிதி […]

#Madurai 5 Min Read
Alanganallur Jallikattu

ஜல்லிக்கட்டு போட்டி – இன்று ஆலோசனை..!

ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக இன்று அமைச்சர் ஆலோசனை.  ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை நந்தனத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில், கால்நடை துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

jallikattu 1 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு போட்டி – வரும் 22-ஆம் தேதி ஆலோசனை..!

ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக வரும்-22 ஆம் தேதி அமைச்சர் ஆலோசனை.  ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக வரும்-22 ஆம் தேதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை நந்தனத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில், கால்நடை துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

jallikattu 2 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு நடத்த தடைகோரி மனு – பரிசீலிக்க உத்தரவு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கூடாது எனக்கோரிய மனுவை பரிசீலித்து ஆணையிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு. திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கூடாது எனக்கோரிய மனுவை பரிசீலித்து ஆணையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி மனு மீது திருப்பூர் ஆட்சியர், தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு […]

#Chennai 2 Min Read
Default Image