கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரத்து – சி.பி.எஸ்.இ!

The CBSE has announced that there will be no current examination fee for 10th and 12th class students who have lost their parents due to corona.

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு தேர்வு கட்டணம் கிடையாது என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவிகளுக்கான நடப்பாண்டு பதிவு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் கிடையாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இது வளர்ப்புப் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2021-2022 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவிகளின் பட்டியலை சமர்ப்பிக்குமாறும், அதில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் குறித்த விவரங்களை சரிபார்த்து வழங்க வேண்டுமெனவும் சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

unknown node