“முன்னாள் முதல்வர் மரணம்”5 வது முறையாக மருத்துவர் சிவகுமாருக்கு ஆணையம் சம்மன்..!!!

Default Image

மருத்துவர் சிவகுமாருக்கு ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான ஆவணங்களை நேரில் சமர்பிக்க வேண்டும்ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related image

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஜெயலலிதாவின் சமையலர், உதவியாளர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது.

Image result for arumugasamy commission

 

மேலும் இதில் பலரை விசாரிக்க இந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் மருத்துவர் சிவகுமார் 5-வது முறையாக விசாரணைக்காக  ஆஜராகக் கோரி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Related image
இதனிடையே மருத்துவர் சிவகுமார் ஏற்கெனவே ஜனவரி 8, மார்ச் 14, மே 2, மே 26 ஆகிய 4 நாட்கள் ஆஜரானார்.மேலும் ஆணையத்தின் தரப்பில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு மீண்டும் 5 முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சம்மனில் கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குறித்த விபரம் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளின் விபரம் அவற்றில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான ஆவணங்களை நேரில் சமர்பிக்க வேண்டும் என்று மருத்துவர் சிவகுமாருக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்