ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலவர் ஸ்டாலின் முதல் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வரை.

EVKS Elangovan

சென்னை:காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக் குறைவால் காலமானார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த நவம்பர் 13ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர் 2024) காலமானார் என்று மியாட் மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாளை அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ராமாபுரம் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. தற்பொழுது, அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இன்றைய தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இளங்கோவனின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்தின் தோழர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என  தெரிவித்துள்ளார்.

unknown node

திருமாவளவன்

விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினரும் மேனாள் இந்திய ஒன்றிய அமைச்சருமான அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவு பெருந்துயரத்தை அளிக்கிறது. அவருடைய மறைவு தமிழக அரசியல் களத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ” ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

டி. டி. வி. தினகரன்

அமமுக தலைவர் டி. டி. வி. தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில், ” ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node