பிராந்திய மொழிகளில் சுற்றுச்சூழல் அறிக்கை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

The Central Government has informed the Chennai High Court that the environmental report in regional languages will be released next month.

பிராந்திய மொழிகளில் சுற்றுச்சூழல் அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, அனைத்து பிராந்திய மொழிகளிலும் அக்டோபர் 21-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசுதெரிவித்துள்ளது. பொதுமக்களிடம் விரிவாக கருத்து கேட்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிடக் கோரிய வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.