கனமழை... 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.! 

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

Heavy Rain - 8 district school leave

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறார்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், தேனி மாவட்டத்தில் பள்ளிகல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ள்ளனர்.

அதே போல, நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்திற்கு ஏற்கனவே 5 நாள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.

இன்று தமிழகத்த்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.