தூத்துக்குடி: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (டிசம்பர் 12) பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
திருநெல்வேலி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை மதியத்திற்கு பிறகு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று ஒருநாள் (12.12.2024) பள்ளிகள் விடுமுறை விடப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். ஏற்கனவே, 17 மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, […]
சென்னை: வைக்கம் போராட்டத்தின் 100-ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி கேரள மாநிலத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் ரூ.8.14 கோடியில் நினைவகம் புதுப்பிக்கப்பட்டது. கனமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் திறப்பு 5,000 கன அடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. 119 அடி […]
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவிவருவதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி, திருவாரூர், சென்னை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய இடைவிடாது மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக, 12 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சி, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை, அரியலூர், […]
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக உள்ள புதுச்சேரியில் முகாம்களாக செயல்படும் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை (05.12.2024) விடுமுறை என்றும், ஏனைய அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நாளை இயங்கும் என்று கல்வி துறை அறிவித்துள்ளது. அரசு தொடக்கப் பல்லி, தவளக்குப்பம். அரசு தொடக்கப் பள்வி, காக்காயன்தோப்பு. […]
விழுப்புரம்: நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து ஊரே வெள்ளக்காடாக மாறியது. அதிலும் குறிப்பாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும் இதில், விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று பிற்பகல் முதல் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததுடன், மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகவும் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, […]
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. புயலால் ஒரே நாளில் பெய்த 47 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால், பல இடங்களில் சாலையோரங்களில் இருந்த மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மீட்புப் பணிகளில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். […]
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, டெல்டா […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும், மாவட்ட அளவில் பரவலாக கனமழை […]
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனியில் இருந்து தங்களை காத்துக்கொள்ள சாலையில் தீ மூட்டி குளிர்காய்கின்றனர். இந்நிலையில், டெல்லியில் கடுமையான குளிர் காரணமாக நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை என டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி இன்று தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெல்லியில் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், தேனி மாவட்டத்தில் பள்ளிகல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ள்ளனர். அதே போல, நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்திற்கு ஏற்கனவே 5 நாள் […]
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியால் நேற்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆரஞ்ச் அலர்ட்..! நாளை […]
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த நிலையில், காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு காரணமாக நவ.11-ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். அதன்படி 11-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் நவ.11 வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் […]
நாளை கோவை, நீலகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்து இருந்தது. சில மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரியில் அதி கனமழை […]
தலைநகர் டெல்லியில், அடிக்கடி காற்று மாசு அபாயகரமான நிலைக்கு செல்வதுண்டு. அந்த வகையில், டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவை எட்டிய நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசியம் இல்லாத கட்டுமானப் பணிகளுக்கு தடை, டீசல் லாரிகள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. திமுக வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை […]
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதற்கு குருவாக இருந்தவர். பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி அவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது. பங்காரு அடிகளாருக்கு நாளை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு..! ஆதிபராசக்தி கோயிலில் மாதவிடாய் காலங்களிலும் […]
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது, கரூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக கரூர் ஆட்சியர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும். வங்கக்கடலில் உருவாகி ஓய்ந்த மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையின் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு அப்போது விடுமுறைகள் அளிக்கப்பட்டன. தற்போது இதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 9ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய நாளை நவம்பர் 17ஆம் தேதி சென்னையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிளமை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகை:கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.அந்த வகையில் நாகை மாவட்டத்தில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,1-9 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.