திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதி.!

- டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதி.
சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தயாநிதி மாறன் கடந்த 30-ம் தேதி அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை குற்றம்சாட்டி அளித்த பேட்டி ஒன்று வெளியானது.
இதைத்தொடர்ந்து அவரது பேட்டியானது உண்மை மற்றும் நம்பிக்கைக்கு எதிரானது என்றும், பொதுநலனுக்கு எதிராக வேண்டுமென்று அளிக்கப்பட்ட பேட்டி என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஐபிசி 499, 500-வது பிரிவுகளின் கீழ் தயாநிதி மாறன் அவதூறாக பேசி குற்றம் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தயாநிதி மாறன் மீது 1974-ம் ஆண்டு மத்திய சட்டத்தின்கீழ் அவதூறு வழக்குத் தொடுக்க ஆளுநரால் அனுமதியளிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025
ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…
February 28, 2025