அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கடந்த ஆண்டு அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்பின் கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்ட்ரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு […]
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முரசொலி நிலம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாக கூறி திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூல பத்திரத்தை வெளியிட வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறி, பாமக […]
கடந்த அதிமுக அரசால் போடப்பட்ட 50 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக அரசால் பத்திரிகையாளர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் மீது போடப்பட்ட 50 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது மாநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான […]
நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பொழுது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் தன் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல் நிலையத்தில் நான் உட்பட பல நபர்கள் […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதி. சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தயாநிதி மாறன் கடந்த 30-ம் தேதி அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை குற்றம்சாட்டி […]