சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்மா கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு துவங்கியுள்ள அம்மா மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய நேரத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார். இந்த தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியில் எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் – சீமான் இதற்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் […]
கமல் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் அழைக்க மறுக்கிறார். சுயநலனுக்காகவும், சந்தர்ப்பத்துக்காகவும் எம்.ஜி.ஆர் பெயரை அவர் பயன்படுத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் பற்றி பேச அதிமுகவின் வாக்குகளை பெற கமல் முயற்சிக்கிறார் என்றும், எம்.ஜி.ஆர்-ரை எந்த கட்சியினரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கமல் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர் […]
ஊழலைப் பற்றி பேச திமுக மற்றும் ஆ.ராசாவுக்கு எந்த தகுதியும் இல்லை. இந்தியா மற்றும் தமிழகத்தின் அவமானச் சின்னம் ஆ.ராசா. அரசியல் வட்டாரத்தை பொறுத்தவரையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் அவ்வப்போது வார்த்தை மோதலில் ஈடுபடுவதுண்டு. ஒருவரையொருவர் விமர்சித்து பேசுவதும் உண்டு. அந்த வகையில், ஆ.ராசா அதிமுக கட்சியினரை சீண்ட, அதிமுகவும் ஆ.ராசாவை விமர்சித்து பேசியுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற கட்சி கூட்ட ஒன்றில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், […]
இனப்படுகொலை செய்த ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. இந்நிலையில், முரளிதரன் இனப்படுகொலையின் போது, இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பதால், விஜய் […]
மு.க. ஸ்டாலின் இருந்து வரும் காரணத்தினால் திமுக கற்பூரம் போல கரைந்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரம், ஆட்டுத்தொட்டி பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நாடகத்தை நேற்று அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் வரும் தேர்தலில் கூட்டணி அமையுமென கூறினார். மேலும் பேசிய அவர், அதிமுகவை பொருத்தவரை ஜெயலலிதா இருந்த போது கட்சி எந்த பலத்தில் இருந்ததோ, அதே பலத்தில்தான் தற்போதும் […]
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான பதில் அளித்துவிட்டார் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தவும், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது. இந்தநிலையில், விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி தர வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே வருகின்றனர். அதில் ஒரு பங்காக, அண்மையில் பாஜக மாநில தலைவர் முருகன், தமிழக முதல்வர் […]
எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதிமுக அரசு அதனை நிறைவேற்றும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை, காசிமேடு பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியே மீண்டும் மலரும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சி உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தால் அதிமுக […]
சசிகலா சிறையிலிருந்து வந்தாலும், அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றமிருக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா,சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணையில்,ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதி. சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புப்படுத்தி பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தயாநிதி மாறன் கடந்த 30-ம் தேதி அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை குற்றம்சாட்டி […]
ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவே நீடிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாங்குநேரியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகவே நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர் என்றும் முதலமைச்சராக முடியாது, அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நானும் கல்லூரிக் காலத்தில் ஒரு குத்துச்சண்டை வீரர் தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற குத்திச்சண்டை போட்டியில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மாணவி கலைவாணி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து இன்று வாழ்த்து பெற்றார். அப்போது பேசிய அவர் நானும் கல்லூரி காலங்களில் குத்துசண்டை வீரர் தான் என்றும் போட்டியில் கலந்து கொள்வது எனக்கு பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழை கொச்சைப்படுத்தி வன்முறையை தூண்ட நினைத்தால் ஹெச்.ராஜாவுக்கு சிறை உறுதி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதற்கு முன் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தமிழ்மொழி என்ற சனியனே இருக்கக்கூடாது என ஈ.வெ.ரா. பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக என்றும் எல்லா விதத்திலும் தமிழ்மொழி என்ற பெயரே இருக்கக் கூடாது என்பதற்காக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட சொல்லே திராவிடம் என்றும், தனது கருத்துக்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தன்னை சிலர் வசைபாடுவதாகக் கூறியிருந்தார். மேலும் செய்திகளுக்கு […]
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன் அணியில் அதிமுக.வை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு இணைந்தார். இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், “எங்கள் தரப்பில் யாரும் ஸ்லீப்பர் செல்கள் இல்லை, நாங்கள் விழிப்பு உணர்வுடன்தான் இருக்கிறோம். தினகரன் தரப்பில் தான் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர்.எடப்பாடி அரசு பெரும்பான்மையுடன் தான் செயல்படுகிறது. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பேசி தீர்க்க வேண்டியது […]
கமல்ஹாசன் தற்போது ட்விட்டர் மூலம் ஆளும் அதிமுக மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறி வருகிறார்.அதேபோல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்ப்பாக கருத்து தெரிவித்திருந்தார் .எனவே அவர் கருத்துக்கு பதில் கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.மாடி வீட்டிலிருந்து மக்களைப் பார்க்கும் கமல்ஹாசனால் குடிசைகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலைகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் […]
ஆர்.கே. நகர் இடைதேர்தலில் தினகரன் வெற்றிபெற்றதில் இருந்து பல்வேறு கருத்துகள் உலாவி வருகின்றனர் .இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் அவரை குறித்து கருத்து கூறியிருந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து கூறியுள்ளார். கடன் சொல்லி ஓட்டு கேட்ட வரலாறு எங்கும் நடந்தது இல்லை என ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரனை, அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். ஆர்.கே.நகர் மக்கள் ரூ.10 ஆயிரம் கேட்டு தினகரனை தேடி வருவதாகவும் கூறினார். மக்களை நம்பியே நாங்கள் உள்ளோம், பணத்தை நம்பி இல்லை என்ற […]