திமுக கூட்டணியா? இந்தியா கூட்டணியா? விசிக தலைவர் திருமாவளவன்

தமிழகத்தில் இந்திய கூட்டணியை தற்போது TVK முன்னிலை வகிக்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்

Hero Image

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கழகம் (விசிக) ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அந்த ஆதரவு வெளியில் இருந்து மட்டுமே என்று விசிக தலைவர் திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த திருமாவளவன் கூறியதாவது:“உயர்நிலைக்குழுவில் நாங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் வெளியிலிருந்து ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதுதான். நாங்கள் அதிகாரப் பகிர்வு குறித்து எதுவும் த.வெ.க. தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களோடு பேசவில்லை. ஆனால் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்கிற கருத்தை வைத்துச் சொல்லி இருக்கிறார்கள். பதவியேற்புக்கு பிறகு அது குறித்து பேசலாம் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம்.” என தெரிவித்தார் .

காங்கிரஸ் கட்சி திமுக அணியிலிருந்து வெளியேறிவிட்டது என்றும், தவெகவுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது என்று முடிவெடுத்துவிட்டதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டார். இதனால், “திமுக இந்தியா பிளாக் என்கிற அந்த அணியில் இடம்பெற வாய்ப்பில்லை” என்றார்.

மேலும்.மக்களவை உறுப்பினர் கனிமொழி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி, திமுக உறுப்பினர்களுக்கு தனியாக இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனைத்தொடர்ந்து, திமுகவின் எதிர்காலம் பாதிக்கப்படாது என்று திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார். “திமுக 60 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. திறம்பட சட்டசபையில் எதிர்க்கட்சியாக பணியாற்றுவார்கள். ஆகவே எந்தப் பாதிப்பும் அவர்களின் அரசியல் எதிர்காலத்தில் நிகழாது” என்று அவர் கூறினார்.