மக்களவை தேர்தல் : தமிழக மக்களவை தொகுதியான சிதம்பரத்தில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாவளவன் அவர்கள் 48,962 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக போட்டியிட்ட எம்.சந்திரஹாசன் 38,076 வாக்குகள் பெற்று -10,886 வாக்குகள் பின்னடைவில் உள்ளார். மேலும், இவர்களை தொடர்ந்து 3-வதாக 15,582 வாக்குகள் பெற்று -33,380 வாக்குகள் பெற்று பாஜக சார்பாக போட்டியிட்ட கார்த்தியாயினி பின்னடைவில் இருந்து வருகிறார். விடுதலை சிறுத்தை கட்சியின் மற்றொரு தொகுதியான விழுப்புரத்தில் ரவிக்குமார் […]
தென்மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காரணமாக த.நா.பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூத்துக்குடி, திருநெல்வேலி […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். கடைசியாக கடந்த கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி வீடு திரும்பினார். நேற்று மீண்டும் மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து 2 நாட்களில் […]
பாபர் மசூதி இடிப்புக்கு அம்பேத்கார் நினைவு நாளை தேர்வு செய்தது போல, தமிழக RSS அமைப்பு ஊர்வலத்திற்கு காந்தி பிறந்தநாளை தேர்வு செய்துள்ளனர். – விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டிருந்தார். வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இந்த ஊரவலத்திற்கு அனுமதி கொடுத்ததை திரும்ப பெறுமாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார் இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் […]
2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன. இந்நிலையில்,தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் தொலை நோக்கு கொண்ட நிதிநிலை அறிக்கை இது.இதை அளித்த முதலமைச்சர்,நிதி அமைச்சர்,நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியதாவது: இது வெறும் வரவு செலவு கணக்காக அல்ல: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது ஒரு சமூகநீதி […]
நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து. தருமபுரி அருகே நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி […]
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிடவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும்,நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடந்து வரக்கூடிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கி சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு […]
கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் கடலூர் அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம்,கண்ணகி -முருகேசன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், மேல்முறையீட்டில் தப்பித்து விடாதவகையில் இந்த வழக்கை உரிய முறையில் நடத்த வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: “கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டை கண்ணகி -முருகேசன் சாதிமறுப்புத் திருமணத் தம்பதியினரை ஆணவப் படுகொலை செய்த […]
அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என முதல்வர் அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என அறிவித்துள்ளார். இந்நிலையில்,முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி […]
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா தாக்கல் செய்யவுள்ளது என்ற முதல்வரின் அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் – ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் ஆக வேண்டும் கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். […]
சிஏஏ சட்டத்தால் சொந்தமாக நிலமோ,வீடோ இல்லாத இந்தியர்கள் குடியுரிமையை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இந்த தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்நிலையில்,குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் கொண்டு வந்ததற்கு,தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரவேற்கிறோம்: “குடியுரிமைத் […]
கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜியோதிர் ஆதித்ய சிந்தியா அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “இயக்கம் நவீன உலகின் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையான இந்தியாவில் விமான சேவையின் அளவை […]
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீக்கப்பட்டது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.டி.எம். புரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயிற்சி முடித்த 24 […]
பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய காரணத்திற்காக நடிகை மீரா மிதுன் மீது விசிக கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தென்னிந்திய அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் தான் மீரா மிதுன். இவர் 6 அழகிப் பட்டம் வென்றது மட்டுமல்லாமல், தமிழ் திரை உலகில் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமாகிய இவர், அதனை தொடர்ந்து சமூக […]
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் தமிழகத்தில் மொழியியல் நூலகம் அமைக்கப்பட்ட வேண்டும் என விசிக தலைவர் தோல்.திருமாவளவன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் “மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் துவக்க வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.தமிழ்நாட்டில் […]
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரில் “மொழியியல் பல்கலைக்கழகம்” தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் ஆடம்பரமான நிகழ்வுகளை தவிர்த்து, தங்களது வீடுகளில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். மேலும்,சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
தமிழகத்தில் உள்ள பல்கலைகழகத் துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதவர்கள் எந்த நம்பிக்கையில் மனுச்செய்கின்றனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பல்கலைகழகத் துணைவேந்தர் பதவிக்குத் தமிழர் அல்லாதோரும் மனுச்செய்வது எந்த நம்பிக்கையில்?,இதற்கு தமிழக அரசைப் பொருட்படுத்தாத மேதகு ஆளுநரின் அதிகார வரம்புமீறல் தான் காரணமா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடைசி நாள்: “தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான […]
பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாத்திட சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மராத்தா வகுப்பினருக்கு மகாராஷ்டிர மாநில அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச […]
அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா உதவித்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சட்ட மன்ற உறுப்பினரும்,விசிக தலைவருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அல்லலுறும் ஊடகவியலாளர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகையும் அவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று,தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த உதவித்தொகையைப் பாரபட்சமின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலமாக தண்டனை பெற்று வரும்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவையில் மீண்டும் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் அறிக்கை […]